Nagapattinam

News December 15, 2024

நாகை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

image

காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட 18,000 கன அடிக்கும் மேலான உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இது 60,000 கன அடியாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. மேலும் கொள்ளிடம் ஆற்றுநீர் காவிரி வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட திருமருகல் அரசலாற்றின் வழியாக கடலில் கலக்கிறது. இதனால் முதலைகள் வரும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நாகை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 15, 2024

நாகை மக்களுக்கு எச்சரிக்கை

image

காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரிநீர் 18000 கன அடிக்கு மேல் அதிகப்படியான வெள்ள உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இது 60000 கன அடி உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. கொள்ளிடம் ஆற்றுநீர் காவிரி வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட திருமருகல் அரசலாற்றின் வழியாக கடலில் கலக்கிறது. இதில் முதலைகள் வரும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நாகை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 14, 2024

ஆதிக்கத்தை எதிர்த்தவர் இளங்கோவன் – நாகை MLA

image

EVKS இளங்கோவன் எம்.எல்.ஏ. மறைவை ஒட்டி நாகையில் இன்று நாகை எம்.எல்.ஏ ஆளுர் ஷாநவாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,காங்கிரஸ் கட்சியை உயிர்ப்போடு வளர்த்தவர், அரசியல் களத்தில் பெரியாரியத்தை பின்பற்றியவர், ஆதிக்கத்தை எதிர்த்து துணிந்து முழங்கியவர் இளங்கோவன். இவரது மறைவு அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.

News December 14, 2024

எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் வருகின்ற 27ந்தேதி மாலை 4.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடக்கிறது. இதில் நாகை மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் உபயோகப்படுத்தும் நுகர்வோர்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்து உள்ளார்.

News December 13, 2024

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் 17.8 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News December 12, 2024

கோடியக்கரையில் 17.8 செ.மீ மழை பதிவு

image

நாகை மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 78.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கோடியக்கரையில் 17.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினத்தில் 6.3 செ.மீ, திருப்பூண்டி 9.4 செ.மீ, வேளாங்கண்ணி 10.5 செ.மீ, திருக்குவளை 9.9 செ.மீ, தலைஞாயிறு 14.6 செ.மீ, வேதாரண்யம் 10.0 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

News December 12, 2024

செம்பியன்மகாதேவியில் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பலி

image

செம்பியன்மகாதேவியை சேர்ந்த முருகதாஸ் கூரை வீட்டில் மனைவி மற்றும் மகன் – மகளுடன் வசித்து வருகின்றனர். மகன் கவியழகன் செம்பியன் மகாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்த முருகதாஸ் மகன் கவியழகன் மீது சுவர் விழுந்தது. மேலும் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் தந்தை தங்கை லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

News December 12, 2024

மது அருந்திவிட்டு வாகன ஓட்டுவதற்கு எதிரான பிரசாரம்

image

நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறவுள்ளது. அந்த வகையில் திருக்குவளை வட்டம் எட்டுக்குடியிலும், 17ந்தேதி மணக்குடியிலும், 18ந்தேதி ஆலங்குடியிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது என ஆட்சியர் பா.ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

News December 11, 2024

நாகை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

image

உலக பிரசித்தி பெற்ற நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு நாளை (டிச.12) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். செய்தியை ஷேர் செய்யவும்!

News December 11, 2024

நாகை மக்களுக்கு எஸ்.பி. முக்கிய தகவல்

image

நாகை மாவட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை மற்றும் தங்கள் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பிரச்சனைகள் குறித்து 8428103090 என்கின்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் போலீஸ் சூப்ரண்ட் அருண் கபிலன் தெரிவித்தார.

error: Content is protected !!