India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய விமானப்படையின் அக்னிவீா் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆள்சோ்ப்பு தோ்வுக்கு ஜூலை 8-ஆம்தேதி முதல் 28-ஆம்தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். அக்னிவீா் வாயு தோ்வுக்கு 2004 ஜூலை 3-ஆம்தேதி முதல் 2008 ஜன. 3-ஆம்தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
வேதாரண்யம் அருகே புஷ்பவனம் ஊராட்சியில் நெகிழி மறுசுழற்சி மையத்தில் நெகிழி மறுசுழற்சி முறைகள் குறித்து உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), ரஞ்ஜீத் சிங் உள்ளார்.
நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா இன்று காலை நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுப் பேசினார். அப்போது, வறட்சி வரும்போது எல்லாம் நிவாரணத் தொகை வழங்கிய கட்சி அதிமுக என்றார். மேலும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.
விவசாய கூலி தொழிலாளர்களின் பற்றாக்குறையை சரி செய்யும் வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடப்படுகின்றன. எனவே நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இதனை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் நேற்று தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் சிவசக்தி நிறுவனத்தில் முதலீடு செய்த பலருக்கு பணம் திரும்ப வழங்கப்படாமல் உள்ளதாக எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் மக்கள் முன்னேற்ற பொதுநல சங்க மாநிலத் தலைவர் விஜயராகவன் தலைமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று மனு அளித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டத்தை ஒட்டி ஜூன்.20ம் தேதி ஒருநாள் மட்டும், நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த மாதம் 6ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்மங்கலத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி லலிதா குடிசை வீட்டில் டீக்கடை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று திடீரென வீட்டின் கூரையில் தீ பற்றி குடிசை முழுவதும் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் தீ அணைக்க முயற்சித்தனர். தீயை அணைப்பதற்குள் குடிசை முழுவதும் எரிந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக கோவிந்தராஜ் மற்றும் லலிதா இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூரில் தர்கா குளம், தெரு பள்ளி, தைக்கால், மனோரா வடபுறம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் செம்மறி ஆடு விற்பனை நடந்து வருகிறது. புதுக்கோட்டை அறந்தாங்கி அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகள் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.2 கோடியே 25 லட்சத்துக்கு விற்பனை ஆகி உள்ளது. இன்று அதிக விற்பனை நடக்கும் எனக் கூறப்படுகிறது.
மீன்பிடி தடைகாலம் முடிந்து மீனவர்கள் நேற்று முதல் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் மீனவர்களின் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும் வெளி மாநில மீனவர்களை அழைத்து செல்ல கூடாது இந்திய கடல் எல்லையை தாண்டக்கூடாது அடையாள அட்டை படகு உரிமம் உயிர் காப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் இரட்டைமடி வலை பயன்படுத்த கூடாது என மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
ஹேராய்னின் மூலப் பொருளான ஹசிஸ் என்ற போதைப் பொருளை வைத்திருந்த் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியை சேர்ந்த இருவரை க்யூ பிரிவு போலீசார் இன்று (ஜூன் 14) கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 75 கிலோ ஹசிஸ் போதை பொருளை கைப்பற்றினர். விசாரணையில் இது ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு சுமார் 180 கோடி இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.