India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கடந்த ஆண்டு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பின்னர் காலநிலை மாற்றம், நிர்வாக சீர்திருத்தம், போதுமான பயணிகள் இல்லாததால் கப்பல் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், நிறுத்தப்பட்ட சிவகங்கை எனும் அந்த கப்பல் 12 ஆம் தேதி முதல் மீண்டும் நாகையில் இருந்து இலங்கைக்கு தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாயாரோஹன உடனுறை ஸ்ரீ நீலாயதாச்சி அம்மன் கோயிலில் இன்று (பிப்.10) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை மற்றும் திருமருகல் ஒன்றியங்களில் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். எனவே பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் மது விலக்கு குற்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 104 வாகனங்கள் வெளிப்பாளையத்தில் 12ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன. ஏலம் எடுக்க வருபவர்கள் அன்றைய தினம் காலை 8-9 மணிக்குள் தங்கள் முகவரியினை அடையாள அட்டையுடன் வந்து ஏலம் விடும் குழுவிடம் பதிவு செய்ய வேண்டும். ஏலம் எடுத்தவுடன் முழு தொகையும் செலுத்த வேண்டும் என்று மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாகை மாவட்ட பள்ளி கல்வி துறை மற்றும் மாவட்ட கல்வி தன் முனைப்பு திட்டத்தின் கீழ் நாகை மாவட்ட நிர்வாகம் PRJR பேட்மிண்டன் அகாடமியுடன் இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு பேட்மிண்டன் பயிற்சி திட்டத்தை தொடங்கி உள்ளது. இப்பயிற்சியில் 14 வயதுக்குட்பட்ட 24 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் திறன்களை மேம்படுத்த மாதந்தோறும் போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வள்ளலார் நினைவு தினம் வரும் பிப்.11-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசின் உத்தரவுப்படி நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களுக்கு அன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், இதனை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் அம்பல் பொறக்குடி ஊராட்சி பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் புதிதாக கட்டப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அதன் பணிகளை திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர் இன்று பிப்ரவரி .08 ஆய்வு செய்தார். துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர். இதனால் விவசாயிகளுகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பென்காக் சிலாட் போட்டியில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கனிமொழி வெள்ளி பதக்கம் வென்றார். தற்காப்பு கலைகளில் ஒன்றான பென்காக் ஸ்லாட் போட்டியில் பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 7 வரை தமிழ்நாடு கொங்குநாடு கல்லூரியில் நடைபெற்ற கெலோ இந்தியா மகளிர் லீக் 2025 இல் நாகையை சேர்ந்த கனிமொழி என்பவர் வெள்ளி பதக்கம் மற்றும் 4000 ரொக்கம் பெற்று நாகை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். பயிற்சியாளர் கே.ரமேஷ் பாராட்டினார்.
நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பிடிபட்ட 104 வாகனங்கள் வருகின்ற 12ஆம் தேதி காலை 10 மணிக்கு பழைய வெளிப்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்து ஏலத்தில் பங்கேற்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற பிப்-18ம் தேதி அன்று ‘விரால் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு’ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் தங்கள் பெயர்களை விண்ணப்ப படிவத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாகை மாவட்டத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு 11.2.2025 செவ்வாய் அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் எனவும், அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Sorry, no posts matched your criteria.