India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குழந்தை தொழிலாளர்கள், குழந்தை திருமணம், வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகள், ஆதரவின்றி தெருக்களில் சுற்றி திரியும் குழந்தைகள், தங்கும் இடம் தேவைப்படும் குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் உள்ளிட்ட குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உடனடியாக 24 மணி நேரமும் இயங்கும் குழந்தைகள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 1098 ல் அழைக்குமாறு ஆட்சியர் ஆகாஷ் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பசுமை சாம்பியன் விருது விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வலைத்தளத்தில் www.tnpcb.gov. in பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 15 க்குள் விண்ணப்பிக்கலாம் மேலும் கூடுதல் தகவலுக்கு தேவைப்படுபவர்கள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நாகப்பட்டினம் அவர்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்கள்.
தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த 100 நபர்களுக்கு ரூ. 1,00,000வீதம் பணமும் வழங்க உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள் இவற்றிற்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட உள்ளது. ஒரு ஆண் மற்றும் 2 சமூக பணி உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 7.3 25 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இயக்குனர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண் 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை கெல்லீஸ் சென்னை 600010 இந்த முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருது 2025க்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் https://nagapattinam.nic. in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ப ஆகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு சென்று வந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து காலநிலை மாற்றம், நிர்வாக சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு குறைக்கப்பட்ட இருவழி பயண கட்டணம் உள்ளிட்ட சலுகைகளுடன் கப்பல் போக்குவரத்து நாளை 22ந் தேதி முதல் தொடங்குகிறது.
ஏழை எளிய மக்கள் தங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை குறைந்த விலைக்கு பெற்று பயன் அடையும் வகையில் மாநிலம் முழுவதும் முதல்வரின் மருந்தகம் திறக்கப்படுகிறது. அந்த வகையில் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், கருப்பம் புலம், கத்தரி புலம், நாகூர் மெயின்ரோடு உள்ளிட்ட 12 இடங்களில் முதல்வரின் மருந்தகம் அமைக்கப்பட உள்ளதாக ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சியில்விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயிர்களுக்கு சீரான முறையில் தண்ணீர் வழங்குவதற்கு வெட்டாற்றில் தடுப்பணை கட்டும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் நாளை (21.02.2025) காலை 9:45 மணி அளவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.இதனை மக்கள் செய்தி தொடர்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
வைத்தீஸ்வரன் கோயிலில் செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்படும் பக்தர்கள் செவ்வாய் பரிகார தோஷ நிவர்த்தி பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழக்கம். இக்கோயிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி அம்மனை வழிபாடு செய்து கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் திரு சாந்து உருண்டை எனும் தீர்த்த மண் பிரசாதத்தை 48 நாட்கள் சாப்பிட்டு வணங்கி வந்தால் தீராத வியாதிகள் தீரும் என்பது ஐதீகம்.
கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக மதிப்பீட்டு முகாம் மாவட்ட நிர்வாகம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மத்திய அரசின் அளிம்கோ நிறுவனம் சார்பில் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் பார்வையிட்டனர்.
Sorry, no posts matched your criteria.