India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், திருக்குவளை, தேவூர், வலிவலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வெயிலுடன் கூடிய சாரல் மழை பெய்தது. பள்ளி செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் குடைகளைப் பிடித்த படி பயணித்து வருகின்றனர். இந்த திடீர் மழையால் கொள்முதல் நிலையங்களில் குவிக்கபட்டிருக்கும் நெல் மூட்டைகள் சேதம் அடைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பிப்.28 வரை நடைபெறும் இந்த முகாமில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைவரும் சேரலாம். ரூ.5 லட்சம் காப்பீடுக்கு ரூ.320, ரூ.10 லட்சத்து ரூ.559, ரூ.15 லட்சத்துக்கு 799 பிரிமியமாக செலுத்த வேண்டும். மேலும் வாகனங்களுக்கான காப்பீட்டு திட்டங்களும் உள்ளன என அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
திருவிடைமருதூர் , தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி கோயில். மறுபிறவி இல்லாதவர்களே இக்கோயிலில் தரிசனம் செய்ய முடியும் என்பது ஐதீகம். ஆண்டிற்கு இரு முறை சிவராத்திரி மற்றும் மாசி மகத்தில் மட்டும் திறக்கப்படும் சூரிய மண்டல வாசல் வழியாக விஸ்வநாதரை தரிசிக்கும் பக்தர்களுக்கு 21 தலைமுறை சாபம் நீங்கும், சிவராத்திரியான இன்று மாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை சூரிய மண்டலவாசல் திறந்திருக்கும்.
மோசமான வானிலை காரணமாக இன்று (பிப்.26) முதல் பிப்.28 வரை 3 நாட்களுக்கு நாகை -இலங்கை கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கப்பல் சேவை தொடங்கிய 4 நாட்களிலேயே மீண்டும் ரத்தானதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், மார்ச் 1 முதல் நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை வழக்கம்போல் தொடங்குமென அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 288 மனுக்களை பெற்று அவற்றுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்
நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்வதாகவும், தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடருமென நாகை அக்கரைப்பட்டி டாடா நகரை சேர்ந்த காளியம்மாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இவருடைய இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க மார்ச் 1 முதல் மே 31 வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தாமத கட்டணத்தில் 25% வரை தள்ளுபடி வழங்கப்படும் என்பதால், பாலிசிதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். நாகபட்டினத்தில் மட்டும் 33 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
நாகை மாவட்டம் பாலக்காடு தெற்கு தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜேந்திரன் (55), வேலையை முடித்து விட்டு சைக்கிளில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவரது பின்புறமாக மணல் ஏற்றி வந்த லாரி அவர் ஓட்டிச்சென்ற சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் படுகாயமடைந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார், லாரி டிரைவர் சந்திரசேகரனை (27) கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்தனர்.
நாகை புதிய கடற்கரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நம்ம நாகை நம்ம இசை நிகழ்ச்சி இன்று 23.2.25 நடைபெற உள்ளது. இசைக்கலைஞர்கள் வளமான இசையை திறமையை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. இந்நிகழ்வின் கலந்து கொள்ளும் கலைஞர்களுக்கு ஸ்பாட் பதிவு மாலை 4:30 மணி முதல் நடைபெறும் முதல் 20 பதிவுகளுக்கு மட்டுமே. பாடகர்கள் மற்றும் வாத்திய கலைஞர்கள் இருவரும் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.