India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே அய்யன்பேட்டையில் ஸ்ரீ படி அளந்தநாயகி சமேத செட்டியப்பர் கோயில் உள்ளது. சிவபெருமான் தராசு பிடித்தும், பார்வதி தேவி அளவை படியை ஏந்தியும் வியாபாரம் செய்யும் கோலத்தில் காட்சியளிக்கும் இந்த கோயிலுக்கு வியாபாரிகள் ஒரு முறை சென்று தரிசித்தால் தங்களது வியாபாரம் பெருகும், நஷ்டம் தீரும் கடன்கள் அடையும் என்பது ஐதீகம்.. வியாபார நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வாட்டாக்குடியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி மல்லிகா(28). குழந்தை இல்லாததால் கடந்த 2015ஆம் ஆண்டு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையின்போது மல்லிகாவின் சின்ன மாமியார் பக்கிரியம்மாள்(50) மல்லிகாவை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்றுள்ளார். தற்போது இந்த வழக்கில் பக்கிரியம்மாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பாக முன்னணி நிறுவனங்களில் ஊக்க தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டத்தில் குறுகிய கால திறன் பயிற்சிக்கு பதிவு செய்யும் முகாம் 11.3.2025 10மணி முதல் 4 மணி வரை அன்று நாகப்பட்டினம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ப ஆகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நாகை பண்டைய காலம்முதல் துறைமுக நகரமாகவே இருந்தது. வடநாட்டினர் தமிழரை ‘நாகர்’ என்றே அழைத்தனர். மேலும் அந்நாட்களில் கடற்கரையில் அமைந்திருந்த துறைமுகத்தை ‘பட்டினம்’ என குறிப்பிட்டுள்ளனர். அதன் காரணமாக தமிழர்கள் (நாகர்) வாழ்ந்த கடற்கரை நகர் நாகப்பட்டினமாயிற்று. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்த நகரம், ‘வள்ளிப்பட்டினம்’ என்றும் அழைக்கப்பட்டது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்த கருத்தரங்கு வருகின்ற 19 ந்தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. காக்கும் கரங்கள் திட்டம் மூலம் 55 வயதுக்குட்பட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சுய தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இன மாணவர்கள் அயல் நாடு சென்று உயர் கல்வி படிக்க கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த விவரங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையை அணுக ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாகை மாவட்டத்தில் 2025-பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 06.03.2025 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறுமாறு ஆட்சியர் ப.ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வடக்குப்பொய்கைநல்லூர் வீரன்குடிகாடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பூவரசன்(20) என்பவர், நேற்று முன்தினம் இரவு வேளாங்கண்ணி பகுதியிலிருந்து நாகையை நோக்கி பைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியில் நேருக்கு நேர் மோதியதில் பைக் தீப்பிடித்து எரிந்ததில் பூவரசனும் எரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி செருதூர் வெள்ளாறு பாலம் அருகில் படகு சவாரி குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் நாளை (04.03.2025) காலை 07.45 மணி அளவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து, பிரதாபராமபுரம் மற்றும் பூவைத்தேடி கடற்கரையில் சுற்றுச்சூழல் மற்றும் கிராமப்புற சுற்றுலா திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். என்பதனை மாவட்ட ஆட்சியர் தகவல் அறிக்கையில் தெரிவித்தார்.
நாகையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்று பேசினார். அப்போது தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களின் நலன் கருதி சென்னையில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் புதிதாக தங்கும் விடுதி கட்டப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பின் போது அரங்கில் கூடியிருந்தோர் கர கோஷம் எழுப்பினர்.
Sorry, no posts matched your criteria.