Nagapattinam

News March 13, 2025

நாகை: ஆற்றுப்படுத்துனருக்கு அரிய வாய்ப்பு

image

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் இயங்கும் நாகை அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துனர் நியமனம் செய்யப்பட உள்ளனர். எனவே உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வருகின்ற 25ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நன்னடத்தை அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

News March 13, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதில் நாகூர் மெயின்ரோடு பகுதியில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருந்துகளின் இருப்பு, விற்பனை நிலவரம், மக்களின் ஆர்வம் குறித்து கேட்டறிந்தார்.

News March 13, 2025

மழையில் உளுந்து, ப.பயிறு, பருத்தி சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை

image

மழையால் திருமருகல், திட்டச்சேரி, குத்தாலம், கீழப்பூதனூர், மேலப்பூதனூர், திருக்கண்ணபுரம், பில்லாளி, கோட்டூர், ஆலத்தூர், ஏா்வாடி, அம்பல், பொறக்குடி, வாழ்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உளுந்து, பச்சைப் பயிறு, பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வேளாண் அதிகாரிகள் பயிர்களின் சேதத்தை ஆய்வுசெய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 12, 2025

நாகப்பட்டினம்: ஆட்சியர் ஆலோசனை 

image

தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்து, அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்ய உள்ளதாக அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் நடைமுறைகளை வரையறைகளுக்கு உட்பட்டு எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் விரைவில் ஆலோசிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது எனவும் ஆலோசனைகள், கருத்துக்களையும் 30.04.2025 க்குள் தெரிவிக்குமாறு ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News March 12, 2025

குழந்தை வரம் அருளும் நல்லாடை அக்னீஸ்வரர்

image

மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில். பரணி நட்சத்திர பரிகார ஸ்தலமாக விளங்கும் இங்கு அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். பார்வதி தேவியின் சாபத்தால் ஒளியை இழந்த சூரியன் இங்கு சாபவிமோசனம் பெற்றதாக ஐதீகம் குழந்தை வரம், கணவன் மனைவி ஒற்றுமை வேண்டி அக்னீஸ்வரரை வழிபட்டால் கை மேல் பலன் கிடைக்கும். நண்பர்களுக்கு பகிரவும், Share It

News March 12, 2025

நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்

image

நாகையில் 6.11 .2020 முதல் 24.4.2022 வரை இன்ஸ்பெக்டராக பணி புரிந்தவர் பெரியசாமி. அப்போது நாகை கீச்சாங்குப்பத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளுக்கு சாதகமாக பெரியசாமி இருந்துள்ளார். இதுகுறித்த புகாரில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு பெரியசாமி அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

News March 12, 2025

நாகையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாகை ADM மகளிர் கல்லூரியில் வருகின்ற 15ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News March 11, 2025

நாகையில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை, மின்சாரம் துண்டிப்பு

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இன்று அதிகாலையில் இருந்து நாகை , வேளாங்கண்ணி, பிரதாபராமபுரம், திருக்குவளை , எட்டுக்குடி , காமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தும், மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

News March 11, 2025

நாகையில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

image

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 15ஆம் தேதி நடக்கிறது. நாகை ADM மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்யப்பட உள்ளன என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News March 11, 2025

நாகை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று (மார்ச்.11) நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW..

error: Content is protected !!