India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை நகராட்சிக்கு உட்பட்ட பாரதி மார்க்கெட் அருகே மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட ட்ரான்ஸ்பார்மில் ஓவர் லோடு காரணமாக இன்று திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியைச் சுற்றியுள்ள அரியபத்திரப்பிள்ளை தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். உடனடியாக தகவறித்து வந்த மின்வாரியத்துறையினர் விரைந்து பழுதை நீக்கியதால் மீண்டும் மின் விநியோகம் சீரானது.
நாகை மக்களவைத் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் ஆதரித்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை நாடி வரும் பாஜக கட்சி தேர்தலுக்குப் பிறகு காணாமல் போய்விடும் என்றார். பின்னர், அப்பகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாகை: தேர்தலின் போது வாக்குசாவடிகளில் பணியாற்றும் போலீசார் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களிடம் கடுமையான வார்த்தைகளை பேசகூடாது,
வாக்காளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கனிவுடன் பதில் கூற வேண்டும். கோபமான வார்த்தைகளால் வாக்கு மையத்தில் பிரச்சனை எழுந்து விடாமல் போலீசார் பணியாற்ற வேண்டுமென நாகை போலீஸ் எஸ்.பி ஹர்சிங் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் அருகே டிஎஸ்ஓ ரமேஷ் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நேற்று தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது வேதாரண்யம்- நாகை பிரதான சாலையில் வந்த வாகனம் ஒன்றை மடக்கி சோதனை செய்ததில், கணக்கில் வராத ரூ.1,78,200 இருப்பது தெரிய வந்தது. இப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினரால் வரும் முதல் செய்யப்பட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நாகப்பட்டினம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப் பொய்கை நல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மழை முத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராமங்களை பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியாற்றும் வேறு மாவட்டத்தில் வாக்குகள் உள்ள தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், அரசு அலுவலர்கள் தங்கள் அஞ்சல் வாக்குகளை செலுத்தும் பணியில் இன்று ஈடுபட்டனர்.
இதனை நாகை தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் போலீஸ் சூப்ரண்ட் ஹர்சிங் உடனிருந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் ஏப்ரல். 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஜானிடாம் வர்கிஸ், காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் தலைமையில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் இரா பேபி உடன் உள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரம் வடமலை ரஸ்தா பகுதியில் வசித்து வந்த ராமராஜன் மற்றும் கார்த்தி ஆகியோரின் வீடுகள் இன்று தீ விபத்தில் தீக்கிரை ஆனது. உடனடியாக தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து வேதாரண்யம் காவல்துறையினர் மின் கசிவால் ஏற்பட்டதா வேறு ஏதேனும் காரணங்களால் என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நாகை கீழ்வேளூர், வேதாரணியம் உள்ளிட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை 36 லட்சத்து 6 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை ரூ.21,56,169 ரூபாய் உரிய ஆவணங்களை காண்பித்தவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து நாகை அவுரித்திடலில் இன்று மாலை 6.30 மணிக்கு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்று வேட்பாளர் செல்வராஜுக்கு ஆதரவாக பேசுகிறார். மேலும், இதில் இந்தியா கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.