India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <

நாகை மாவட்டத்தில் 2026 – 2027ம் ஆண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கிகாரம் புதுப்பித்தல், கூடுதல் தொழிற்பிரிவுகள் ஏற்படுத்தல் ஆகியவற்றிற்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகின்ற 28-2-2026க்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04365-250126 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம் அருகே புதுப்பள்ளி பாலம் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை போலீசார் வெள்ளிக்கிழமை இரவு அதிரடியாக பறிமுதல் செய்தனா். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் வரும் ஜன.16-ம் தேதி (திருவள்ளுவர் தினம்), ஜன.26-ம் தேதி (குடியரசு தினம்) ஆகிய இரண்டு நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் கூடங்களை மூட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி அன்றைய தினம் யாராவது மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

நாகை அருகே மயிலாடுதுறை, புஞ்சை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நற்றுணையப்பர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள மூலவரான நற்றுணையப்பரை வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

நாகை மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிய நாகை மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். SHARE பண்ணுங்க

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (ஜன.10) கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!

நாகை மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற<

நாகை மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் (ஜன.16) மற்றும் குடியரசு தினம் (ஜன.26) ஆகிய இரண்டு நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் கூடங்களை மூட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி அன்றைய தினம் யாராவது மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

நாகை மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.