Nagapattinam

News January 9, 2026

நாகை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

நாகை வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.!

News January 9, 2026

நாகைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று ஜன.9-ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

நாகை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நாகை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 9, 2026

நாகை: கடலுக்குள் செல்ல தடை!

image

தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாகை மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

News January 9, 2026

நாகை: இனி வாட்ஸ்ஆப் மூலம் வரி செலுத்தலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..

News January 9, 2026

நாகை – இலங்கை கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்!

image

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையிலான கப்பல் சேவை, வரும் ஜனவரி 18-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிட்வா புயல் தாக்கத்தால் கடந்த அக்டோபர் 26-ம் தேதி நிறுத்தப்பட்ட கப்பல் சேவை, துறைமுக சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் இயக்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 9, 2026

நாகை: இயற்கை சுற்றுலா அறிவிப்பு – கலெக்டர்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரும் ஜன.17-ம் தேதி (சனிக்கிழமை) கோடியக்கரைக்கு ஒரு நாள் இயற்கை அனுபவ சுற்றுலா அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக நபருக்கு ரூ.900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.11-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 7395889645 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரும் ஜன.11-ம் தேதி, ‘நாகப்பட்டினம் வரலாற்று பயணம்’ எனும் தலைப்பில் நாகை மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க முக்கிய இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டள்ளது. இதற்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.499 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <>https://forms.gle/2NHxYQqdbzaHYrhKA <<>>என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.08) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.09) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 9, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.08) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.09) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!