India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான முடிவு இன்று வெளியானது. இதில் நாகை மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அசத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள புறாகிராமம் உம்பளச்சேரி, வேட்டைக்காரனிருப்பு உட்பட 8 அரசு பள்ளிகள், 1 அரசு உதவி பெறும் பள்ளி,1 சுயநிதி பள்ளி,8 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என மொத்தம் 18 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், நாகை மாவட்டத்தில் தேர்ச்சி 91.19% பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 88.81 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 93.06% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு 37,000 மேற்பட்ட மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளில் அறிந்து கொள்ளலாம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற வரும் ஜல் ஜீவன் திட்டத்தின் குடிநீர் திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். உடன் தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு நேரடி ஆய்வில் ஈடுபட்டனர். நாகையில் உள்ள குடிநீர் வாரிய அதிகாரியிடம் நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு அனைத்து பணிகளையும் கேட்டறிந்தார்
மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பீச் வாலிபால் உலக சாம்பியன் ஷீப் போட்டி சீனாவில் மே 28-ஆம் தேதி தொடங்கி ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.போட்டியில் பங்கேற்கும் வீரா்கள் தோ்வு செய்யும் பணி நாகை புதிய கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட 10-க்கும் அதிகமான மாநிலங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா்.
நாகை மாவட்டம் திருப்பூண்டியில் நேற்று இளைஞர்களுக்கான 20ம் ஆண்டு தொடர் கபடி போட்டி நடைபெற்றது .இந்நிகழ்வில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன். அவர்கள் போட்டியை தொடங்கி வைத்து முதல் பரிசினை வழங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதி, ஞானசேகரன். வேளாங்கண்ணி பேரூர் கழக செயலாளர், மரிய சார்லஸ், கவுன்சிலர் இளம்பரிதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாகை-இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து எதிர்வரும் மே.13 முதல் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த கப்பல் புறப்படும் நேரம், பயணம் கட்டணம் குறித்து எடுத்துரைக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்திய வர்த்தகத் தொழிற் குழுமத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கப்பலை இயக்க உள்ள தனியார் நிறுவனத்தினர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் காற்றின் போக்கு காரணமாக கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீ உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வேளாங்கண்ணி கடற்கரை ஓரத்தில் நேற்று மாலை ஆண் பிணம் கிடப்பதாக கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேளாங்கண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் அங்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 53 வயது மதிக்கதக்க அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார்கள் மற்றும் தகவல்களை தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 5950க்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தரலாம். 94982 11989 என்ற எண்ணிற்கும் புகார் தரலாம் என நாகை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.