India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு “சிவகங்கை” என்ற பெயர் கொண்ட தனியார் பயணிகள் கப்பல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக அக்டோபர் 15 மற்றும் 17ஆம் தேதி கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்படுவதாக சிவகங்கை கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து 19.10.2024 சனிக்கிழமை நடைபெற உள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தலைமையில் இன்று (14.10.2024) நடைபெற்றது.
பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டு சம்பா பயிர்களுக்கான காப்பீடு செய்திட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து பயன் பெற வேண்டுமென ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்
நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் பேரிடர் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார். அதன்படி அவசர உதவி எண் 04365-1077, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1800-233-4233 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அக்.15-ஆம் தேதி (செவ்வாய்) கனமழை எச்சரிக்கையும், அக்.16-ஆம் தேதி அதி கனமழை எச்சரிக்கையும் (ரெட் அலெர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40-55 கி.மீ வரை பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம், நாலுவேதபதி சாஞ்சாடி தெருவை சேர்ந்தவர் குணச்செல்வன்(23). நேற்று நாலுவேதபதி சாஞ்சாடி தெருவைச் சேர்ந்த செல்வராஜ்(65)என்பவரின் புதிதாககட்டப்பட்ட வீட்டில் குணச்செல்வன் சுத்தம் செய்யும் போது பழைய கட்டிப்பிடித்த சிமெண்ட் மூட்டையை தோளில் தூக்கியபோது தலையில் விழுந்து முகம் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார்.
நாகூர் சில்லடி கடற்கரையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் நாகூர் போலீசார் சந்தேகத்துக்கு இடமாக வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். கடம்பங்குடியை நாவலன் (வயது 26) என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த நாகூர் போலீசார், அவரிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
நாகை பண்டைய காலம்முதல் துறைமுக நகரமாகவே இருந்தது. வடநாட்டினர் தமிழரை ‘நாகர்’ என்றே அழைத்தனர். அதன் காரணமாக அவர்கள் வாழ்ந்த கடற்கரை நகர் நாகப்பட்டினமாயிற்று. நாகை மாவட்டம் சோழநாட்டின் கடற்கரையோரப் பகுதியாகவே இருந்து வந்துள்ளது. சோழராட்சியில் ‘சோழகுல வல்லிபட்டினம்’ என்ற பெயரைப் பெற்றிருந்தது. பின்னர் காவிரிப் பூம்பட்டினம் அழிவுக்குப் பின்னர் இந்நகர் பெயர் பெற்ற துறைமுகப்பட்டினமாக விளங்கியது.
தேத்தாக்குடியை சேர்ந்த கலைமகள் கடந்த புதன்கிழமை வீட்டிற்கு அருகே குட்டையில் பிணமாக கிடந்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் கலைமகளின் உறவினரான சண்முகநாதன் 11 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்துள்ளார். இந்த வழக்கில் புகார் கொடுத்த கலைமகளை பழிவாங்கும் நோக்கில் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
நாகையில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக தகவல் வந்தன. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மருந்து கொத்தள ரோட்டில் உள்ள ஒரு கடையிலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கடையிலும் 13.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல் வைத்தனர். மேலும் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Sorry, no posts matched your criteria.