India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் அக்.19-ஆம் தேதி காலை 9 முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளா்கள் தோ்வு செய்ய உள்ளனா். ஷேர் செய்யவும்
நாகப்பட்டினம் மாவட்டம் பொதுமக்கள் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய எண் வெளியிடபட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் தீயணைப்பு மீட்பு பணித்துறை அலுவலர் மற்றும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் விவரம். பா.சரவண பாபு மாவட்ட அலுவலர், செல் 9445086428 மின்னஞ்சல்: distfirenagai@gmail.com மற்றும் சீனிவாசன், மாவட்ட துணை அலுவலர் 9445086429 ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம். ஷேர் செய்யவும்
வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் வசிக்கும் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து முகாம்களில் தங்க வைக்க வேண்டும். மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்
உயர் கல்விக்கு வழிகாட்டும் பாதைகள் ஆயிரம் என்ற நிகழ்ச்சி வரும் 17ஆம் தேதி ஈசனூர் ஆரிபா பொறியியல் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கண்ட நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு ஆகிய புனித தலங்களுக்கு நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்காகவும் மேற்கண்ட பகுதி மக்கள் வெளியூர் செல்வதற்கு வசதியாகவும் நாகர்கோவில் அல்லது திருநெல்வேலியில் இருந்து வேளாங்கண்ணிக்கு காரைக்குடி திருவாரூர் வழியாக புதிய ரயில் இயக்க வேண்டுமென நாகை டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமர் புரடக் ஷன் அன்ட் பாஸஞ்சர் அசோசியேசன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகையில் தொடர் கனமழை யை முன்னிட்டு, பீன்ஸ் அவரைக்காயின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.200, அவரைக்காய் ரூ.100, தக்காளி ரூ.70, சின்ன வெங்காயம் ரூ.60, பல்லாரி ரூ.50, தேங்காய் ரூ.60, மாங்காய் ரூ.60, பச்சை மிளகாய் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.55, முட்டைக்கோஸ் ரூ.40, கத்திரிக்காய் ரூ.40, வாழைக்காய் ரூ.6 (1) என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
வேதாரண்யம் உபகோட்டம் மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. மின்வாரிய விதிகளின்படி நடைபெறும் கூட்டத்தில் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் சார்ந்த குறைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் ஏ.கே.அருண் கபிலன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் வகையில் மக்களை பாதுகாத்திட காவல்துறை தயராக உள்ளது. மழையினால் ஏற்படும் பாதிப்புகள் ஏற்பட்டு உதவிகள் தேவைப்படுவோர் 8428103090 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டு கொண்டுள்ளார்
நாகை மாவட்ட காவல் துறை சார்பில் வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் 22 போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நாகூர் வெட்டாற்றில் பயிற்சி ஒத்திகை நடைப்பெற்றது. இதில் மீட்பு பணிக்காக பயிற்சி பெற்ற 22 போலீசாரை நாகை மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் அருண் கபிலன் இன்று நேரில் சந்தித்து உரிய அறிவுரை வழங்கினார்.
நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் இயற்கை இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் வகையில் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் தேவையான அளவு வைக்கப்பட்டுள்ளது. தேவையான மீட்பு பணியாளர்களும் உள்ளனர். இந்த நிலையில் பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்றிரவு பார்வையிட்டார்.
Sorry, no posts matched your criteria.