Nagapattinam

News May 9, 2024

நாகை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (மே.09) நண்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும். கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்ற நாகை எஸ்பி

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி ஹர்ஷ் சிங் பொதுமக்களை நேற்று சந்தித்து குறைகளை கேட்டறிந்து, 19 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். புகார் அளிக்கும் முகாமில் திருமருகல், திட்டச்சேரி, கீழ்வேளூர், திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.

News May 8, 2024

மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்ற நாகை எஸ்.பி.

image

நாகைமாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து 19 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். புகார் அளிக்கும் முகாமில் திருமருகல் திட்டச்சேரி கீழ்வேளூர் திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.

News May 8, 2024

நாகூரில் 110 சவரன் தங்க நகைகள் கொள்ளை

image

நாகூர் நூல்கடைத் தெருவைச் சேர்ந்தவர் தாவூது பாத்திமா நாச்சியார்(62). இவர் கடந்த 3 ஆம் தேதி தனது தாயுடன் வீட்டை பூட்டைவிட்டு நாகூர் புதுமனைதெருவில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு சென்று இன்று தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டிலிருந்த 110 சவரன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

News May 8, 2024

நாகையில் கல்லூரி கனவு நிகழ்ச்சி துவக்க விழா.

image

நாகப்பட்டினம் வி.பி.என் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற கல்லூரி கனவு நிகழ்ச்சி துவக்க விழா
இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் பேபி உள்ளிட்டோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வை துவங்கி வைத்தனர்.

News May 8, 2024

நெற்றியில் 1 ரூபாய் நாணயத்தை வைத்து போராட்டம்

image

நாகை அருகே பனங்குடியில் சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிகளுக்கு நில எடுப்பில் உரிய நிவாரணத் தொகை வழங்காததை கண்டித்து 8வது நாளாக பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகள்
உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது. விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் காவிரி கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர். தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் நெற்றியில் 1 ரூபாய் நாணயத்தை வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News May 8, 2024

நாகை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (மே.08) மதியம் 1 மணி வரை இடியுடன்கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 8, 2024

மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6 கடைசி

image

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிஎப்எஸ்சி படிப்பு, தலைஞாயிறு மீன்வளக் கல்லூரிகளிலும், பிடெக் (சுற்றுச்சூழல் பொறியியல்) படிப்புகள் நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியிலும் வழங்கப்படுகின்றன.இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு (நேற்று) தொடங்கியது. <>https://tnagfi.ucanapply.com<<>> என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஜூன் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News May 8, 2024

கம்யூனிஸ்ட் நிர்வாகி தந்தை காலமானார்

image

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினரும் கீழையூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான டி.செல்வம் அவர்களின் தந்தை ஆர்‌.தூண்டி இன்று அதிகாலை உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரது இறுதி ஊர்வலம் 08.05.2024 இன்று வாழக்கரை அவர்களது இல்லத்தில் இருந்து நடைபெறும்.

News May 7, 2024

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

image

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திருமருகல் ஊராட்சியில் இன்று நெகிழி ஒழிப்பு மற்றும் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை காவலர்களுக்கு வழங்குதல் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பேரணி உதவி திட்ட அலுவலர் (வீட்டு வசதி) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

error: Content is protected !!