India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மாவட்டம் எட்டுக்குடியில் புகழ்பெற்ற எட்டுக்குடி முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இன்று செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, ஶ்ரீ முருக பெருமானுக்கு பால், தேன், விபூதி, சந்தனம், குங்குமம், மஞ்சள் மற்றும் தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டமானது மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நாகை, நாகூர், திருமருகல், திருப்பூண்டி, திருக்குவளை, கீழ்வேளூர், வேதாரண்யம், விழுந்தமாவடி, வாய்மேடு, கரியாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் உள்ள மாடக்கோவில்களான அம்பல்-பிரம்மபுரீஸ்வரர், திருமருகல் ரத்தினகிரீஸ்வரர், சிக்கல் நவநீதேஸ்வரர், வலிவலம் மனத்துணை நாதர், தேவூர் தேவபுரீஸ்வரர், கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவில் ஆகியவற்றிற்கு ஒருநாள் மரபு சுற்றுலா பயணம் வரும் பிப்.22ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு 73958 89645 என்ற எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் நாகை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

நாகை மாவட்ட மக்களே, இனி இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை பெற அரசு அலுவலகங்கள் அல்லது இ-சேவை மையங்களுக்கு நேரில் அலைய வேண்டிய அவசியமில்லை. இனி அவற்றை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை SHARE பண்ணுங்க.

வேதாரண்யம் – நாகப்பட்டினம் சாலை மார்க்கத்தில் தோப்புத்துறை பகுதியில் உள்ள ரயில்வே கேட் LCNo35 வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக வரும் (07-02-2026) சனிக்கிழமை அன்று இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6:00 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கைகாட்டி பகுதியில் சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கடையில் மோதி டூவீலர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், புகைப்படக் கலைஞர் சுரேஷ்குமார் (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு கீழையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.02) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.