Nagapattinam

News February 5, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.04) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 4, 2026

சமூக பாதுகாப்பு திட்ட பயன்களை வழங்கி ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் முதலமைச்சர் இன்று காணொளிக்காட்சி வாயிலாக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இம்முகாமில் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டப் பயன்கள் வழங்கியதை தொடர்ந்து, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஆட்சியர் திட்ட உதவிகளை வழங்கினார்.

News February 4, 2026

நாகை: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், <>http://cmcell.tn.gov.in என்ற<<>> இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News February 4, 2026

நாகை: பைக் வாங்க அரசு மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில், Subsidy for e-scooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 4, 2026

நாகை: பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற எஸ்பி

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி K.S.பாலகிருஷ்ணன் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இகூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து 15 மனுக்களை எஸ்பி பெற்றார்கள். பின் மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தர். மேலும் காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களுக்கு மனுக்களை விரைந்து முடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

News February 4, 2026

நாகை: ராணுவத்தில் வேலை- கடைசி வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE.
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

News February 4, 2026

நாகை: சிலிண்டர் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

image

நாகை மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 4, 2026

நாகை: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

image

நாகை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்!

News February 4, 2026

நாகை மக்களே! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

image

தமிழகத்தில் நாகை மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்

1. மொத்த பரப்பளவு: 17.92 km2
2. மொத்த மக்கள்தொகை: 1,02,905
3. சட்டமன்ற தொகுதிகள்: 3
4. ஊராட்சி ஒன்றியங்கள்: 6
5. வட்டங்கள்: 4
6. பேரூராட்சிகள்: 5
7. நகராட்சிகள்: 2
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 4, 2026

நாகை: குரூப்-2 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

image

நாகை மாவட்டத்தில் வருகிற 8-ந்தேதி நடைபெறவுள்ள குரூப்-2 முதன்மை எழுத்துத் தேர்வை 79 பேர் எழுதுகின்றனர். மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகளும், அனைத்து மாணவர்களுக்கும் போதிய போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் காலை தேர்விற்கு 8.30 மணிக்கும், பிற்பகல் நடைபெறும் தேர்விற்கு மதியம் 1.30 மணிக்கும் தவறாமல வருகை தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!