Nagapattinam

News July 6, 2025

நாகை – திருவாரூர் ரயில் சேவையில் மாற்றம்

image

கீழ்வேளூர் – திருவாரூர் இடையில் உள்ள ரயில்பாதையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் நிறைவடையாத காரணத்தால் காரைக்கால் – நாகை – திருவாருர் இடையே ஆன பயணிகள் ரயில் ஜூலை 9 ந்தேதி முதல் 14-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் – திருச்சி ரயில் வழக்கமான நேரத்தில் திருவாரூரில் இருந்து இயங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

News July 6, 2025

நாகை மக்களே இதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள், தாலுகா, நகராட்சி உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
3 சட்டமன்ற தொகுதிகள்
▶️நாகப்பட்டினம்
▶️கீழ்வேளூர்
▶️வேதாரண்யம்
4 தாலுகா
▶️நாகப்பட்டினம்
▶️வேதாரண்யம்
▶️திருக்குவளை
▶️கீழ்வேளூர்
2 நகராட்சிகள்
▶️நாகப்பட்டினம்
▶️வேதாரண்யம்
5 பேரூராட்சிகள்
▶️திட்டச்சேரி
▶️வேளாங்கண்ணி
▶️கீழ்வேளூர்
▶️மணல்மேடு
▶️தலைஞாயிறு. ஷேர் பண்ணுங்க!

News July 5, 2025

நாகப்பட்டினம்: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

image

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் நாகை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!

News July 5, 2025

நாகையில் சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி..!

image

நாகை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் (அ) அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவலுக்கு மாவட்ட தொழில் மையத்தை (04365- 251170) தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க.!

News July 5, 2025

நாகை புதிய கடற்கரையில் இன்று மாலை திரைப்படம் திரையிடல்

image

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று ஜூலை 5 சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதில் எல்லோரும் வந்து கலந்து கொண்டு திரைப்படத்தை கண்டு களித்து செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதனை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் திரு ஆகாஷ் அவர்கள் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

News July 5, 2025

நாகை: 12th போதும், ரூ.81,000 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள்<> இங்கே க்ளிக்<<>> செய்து வரும் ஜூலை.18-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்.

News July 5, 2025

நாகை: மனை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு?

image

நாகை மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <>onlineppa.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு நாகை மாவட்டத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News July 5, 2025

நாகை: வீட்டில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு

image

நாகூர் சேர்ந்த நிஷாமா(வயது 60) இவர், ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். வீட்டு வாசலில் இருந்து சத்தம் கேட்டு உள்ளது. அப்போது அவரது வீட்டின் கதவில் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது. அக்கம், பக்கத்தினர் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த நல்ல பாம்பை நவீன கருவி மூலம் லாவகமாக பிடித்தனர்.

News July 5, 2025

நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் தெருக்கூத்து

image

நாகப்பட்டினம் மாவட்ட நிருவாகம் வழங்கும் தெருக்கூத்து சத்தியம், தியாகம், பாரம்பரியம் சொல்லும் அரிச்சந்திரா நாடகம் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் ஞாயிறு (ஜூலை 6) அன்று மாலை 5:30 முதல் 7:30 வரை நடைபெற உள்ளது. இதில் மக்கள் தவறாத கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

News July 4, 2025

மாங்கல்ய வரம் அருளும் வேதபுரீஸ்வரர்

image

நாகப்பட்டினம் மாவட்டம் தேரழுந்தூரில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் திருக்கோயில் ஒரு சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். இங்கு மூலவராக அருள்பாலிக்கும் வேதபுரீஸ்வரர், திருமணத் தடைகளை நீக்கி, மாங்கல்ய வரம் அருளும் அற்புத தெய்வமாக போற்றப்படுகிறார். இவருக்கு வஸ்திரம் சாத்தி அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குமென நம்பப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!