Nagapattinam

News August 6, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

News August 6, 2024

கடைமடைக்கு வந்த காவிரி நீர்

image

மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் ஆனது காவிரி கடைமடை பகுதியான வெண்ணார் பிரிவு அரிச்சந்திரா நதியில் தலைஞாயிறு பகுதிக்கு இன்று காலை வந்தடைந்தது. இதனை பொதுப்பணித்துறை ஊழியர்கள் மதகுகளுக்கு பூஜை செய்து வரவேற்றனர். இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நீர் நாகை மாவட்டத்தின் சம்பா சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

News August 6, 2024

நாகை: 226 மனுக்களை பெற்று கொண்ட ஆட்சியர்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தலைமையில் நேற்று(ஆக.5) நடைபெற்றது. கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 226 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

News August 6, 2024

நாகை: கடைமடையை வந்தடைந்த காவிரி

image

ஆடிப்பெருக்கு மற்றும் குருவை சாகுபடியை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி மற்றும் கொள்ளிடம் நதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொண்டு ஓடினாலும், நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் வந்தடையாமல் இருந்தது. இந்நிலையில் இன்று விடியற்காலை கடைமடை பகுதிகளான வாழக்கரை, மீனம்பநல்லூர் சந்திரநதியை வந்தடைந்ததுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 6, 2024

நாகை மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேர்வு

image

நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் முன்னிலையில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராக கௌசல்யா இளம்பரிதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News August 6, 2024

நாகை: சிறப்பு தத்து நிறுவனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறப்பு தத்து நிறுவனம் (SAA) அமைப்பதற்கு விருப்பம் மற்றும் அனுபவம் உள்ள குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வரும் 20.08.2024-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை www.nagapattinam.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News August 5, 2024

புதிய திட்ட இயக்குநர் பதவி ஏற்பு

image

நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநராக இருந்த ரஞ்சித் சிங்கை அண்மையில் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், நாகை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை புதிய திட்ட இயக்குநராக ரூபன் சங்கர் ராஜ் நியமிக்கப்பட்டார். இன்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் திட்ட இயக்குநராக ரூபன் சங்கர் ராஜ் பொறுப்பேற்று கொண்டார்.

News August 5, 2024

நாகை மீனவர்களின் காவல் 4-ஆவது முறையாக நீட்டிப்பு

image

நாகை மீனவர்கள் 10 பேரின் காவலை 4-ஆவது முறையாக நீடித்து இலங்கை மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலை ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நீடித்ததால் மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 10 பேரை கடந்த ஜூன் 25-ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 5, 2024

நாகையில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி தமிழத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், (ஆகஸ்ட்.5) காலை 10 மணி வரை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்ட்டில் பதிவிடவும்.

News August 4, 2024

நாகை எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்த தலைமையாசிரியர்

image

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களை நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.பாலு சந்தித்து பள்ளியில் திறன் வகுப்பறை (Smart Class) அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். விரைவில் ஸ்மார்ட் கிளாஸ் அமைத்து தரப்படும் என எம்.எல்.ஏ உறுதி அளித்தார்.

error: Content is protected !!