India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விசைப்படகுடன் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவல் பெற்று யாழ்பாணம் சிறையில் எதிர்வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
நாகப்பட்டிணம் மாவட்டம், வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா கோயில் அமைந்துள்ளது. இப்பேராலயத்தில் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி புனித கொடியேற்று விழாவும், செப்டம்பர் 8-ஆம் தேதி பெரிய தேர்பவனியும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் செல்வம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள், சாராயம், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையில் ரோந்து பணிக்காக காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் ஆய்வு செய்தார். பின்பு காவலர்கள் முறையாக வாகனங்களைப் பராமரிக்க அறிவுரை கூறினார்.
தாம்பரம் – வேளாங்கண்ணி (06119) இடையே வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதியும், வேளாங்கண்ணி – தாம்பரம் (06120) இடையே ஆகஸ்ட் 30-ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லும். இந்த சிறப்பு ரயிலில் 3 ஸ்லீப்பர், 3 மூன்றாம் வகுப்பு ஏசி, 7 பொதுப் பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வியை மேற்கொள்ள மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் 3,119 பேர் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தில் பயனடைந்து உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜூலை 2025-ஆம் ஆண்டிற்கான 8 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு பெறப்பட்டுள்ளது. அதன்படி மாணவ, மாணவியர்கள் 01.07.2025 அன்று 11½ முதல் 13 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். 02.07.2012-க்கு பின்னர் 01.01.2014-க்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும் என நாகை ஆட்சியர் ஆகாஷ் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் கலந்துக்கொண்டு தமிழக அரசின் நலத்திட்டங்கள் மூலம் பெறப்பட்ட பயனாளிகளிடம் தொலைபேசி மூலம் கருத்துக்களை இன்று (23.08.2024) கேட்டறிந்தார். அப்போது அரசுத்துறையை சேர்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
நாகை மாவட்டத்தின் நில மோசடி தடுப்பு பிரிவின் டி.எஸ்.பி-யாக இருந்த ஏ.அப்துல் ரஹ்மான் புதுக்கோட்டை டி.எஸ்.பி-யாகவும், நாகை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் டி.எஸ்.பி-யாக இருந்த பி.எஸ்.ராமகிருஷ்ணன் மதுரை பெண்களுக்கு எதிரான குற்ற விசாரணை பிரிவின் டி.எஸ்.பி-யாக நியமனம் செய்து காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் மருத்துவ அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு.செந்தில்நாதன் மற்றும் அரசு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.