India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கீழ்வேளூர் அருகே இறையான்குடியில் திமுக – அதிமுக கட்சிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் சிபிஎம் கட்சியின் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நாகை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரபாரதி, கணேஷ் மீது பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

நாகை மாவட்டத்தில் (மார்ச்.04) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை, வெளிப்பாளையம் GVR திருமண மண்டபத்தில் வருகிற மார். 6ஆம் தேதி உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் வேளாண்மை, தோட்டக்கலை, அங்கக சான்று துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை, வேளாண் அறிவியல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் அரங்குகள் அமைக்கின்றன.
எனவே விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேளாண்மை இணை இயக்குநர் பாபு அழைப்பு விடுத்துள்ளார்.

வேதாரணியம் அடுத்த தோப்புத்துறை மலாக்கா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், தோப்புத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே ஒரு வீட்டில் வேலை பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

காரியாபட்டினம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கத்தரிப்புலம் கோவில் குத்தகை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் மரப்பட்டை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஆனந்தராஜ் போதையில் வீட்டிற்கு வந்து சாப்பாடு சரியில்லை என கூறி தகராறு செய்துவிட்டு. வீட்டை விட்டு சென்றுள்ளார். அப்போது தனது மர பட்டறையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு, சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார்.

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக Payment Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். அவ்வாறு வரலைவில்லை என்றால் கவலை வேண்டாம். HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். பணம் வருவதற்கு 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். SHARE பண்ணுங்க!

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி கே எஸ் பாலகிருஷ்ணன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த எஸ்பி,, 14 மனுக்களை பெற்றார். மேலும் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரர்களுக்கு உறுதியளித்தார். தொடர்ந்து காவல் நிலைய அலுவலர்களுக்கு மனுக்களை விரைந்து முடிக்குமாறு உத்திரவிட்டார்.

நாகை வருவாய் அலுவலர் பவணந்தி வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்துள்ளார். அதில், கோட்ட கலால் அலுவலக தனி வருவாய் ஆய்வாளராக வித்யா, நாகை ஆதிதிராவிடர் நல அலுவலக தனி வருவாய் ஆய்வாளராக பத்மநாபன், ஆட்சியர் அலுவலக சி 1 பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளராக கௌதம், நாகை தாசில்தார் அலுவலக முதுநிலை, அ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பிராங்கிளின் சாம்ராஜ், புனிதா ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: CLICK <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.