India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில் அரசின் சிறப்பு பயிற்சி முகாம் சென்னை மயிலாப்பூரில் ஆகஸ்ட்.14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது scdaplacement@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க நாளை (திங்கள்) கடைசி நாளாகும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE NOW!
நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சி தெற்கு வீதியில் உள்ள தனியார் திருமண நிகழ்வில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ற நிகழ்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் மக்களிடம் உரையாற்றினார். நிகழ்வில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கர்நாடகா கே.ஆர்.எஸ் அணையிலிருந்து மேட்டூர் அணைக்கு 1.30 லட்சம் கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தற்போது 100 அடியை எட்டியுள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நீர் வளத்துறை ஆணைய செயற்பொறியாளர் பன்னீர் செல்வம் நாகை உள்ளிட்ட 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆடிப்பெருக்கு விழாவினை சிறப்பாக கொண்டாட நாளை முதல் முதல் 7 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது
நாகையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது: மத்திய அரசின் நிதி நிலையை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழகத்தில் இருந்து டெல்லி சென்றுள்ள 40 எம்பி-கள் தான் இந்தியாவுக்கு வழிகாட்ட போகிறார்கள். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடமும் மத்திய அரசிடமும் கேள்விகளை கேட்டு திணறடிக்க போகிறார்கள் என்றார்.
வண்டுவாஞ்சேரி கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் 6.54 எக்டேர் பரப்பள–வில் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. மண்புழு உரம் மற்றும் உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கு மா, கொய்யா, முந்திரி உள்ளிட்ட 50 லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமான ‘மிஷன் வாத்சல்யா’ திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்து பொதுமக்களிடம் இருந்தும் நன்கொடை பெற்று கல்வி உதவித் தொகை வழங்குகிறது. எனவே பொதுமக்கள் நன்கொடை தந்து உதவ ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குக்குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுவினர் இன்று வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். காலை 10.10 மணிக்கு பனங்குடியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஆய்வினை தொடங்கி, நாகை ஆட்சியர் அலுவலகத்தில் மாலை 3 – 6 மணிக்கு ஆய்வுக் கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது.
நாகை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற ஜூலை 31-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் தாலுக்கா பஞ்சநதிக்குளம், நடுச்சேத்தி ஊராட்சி சிறுதலை காடு பகுதியில் புதிதாக சரணாலயம் அமைப்பதற்கு தேவையான இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் திலகா, கோட்டாட்சியர் பெருமால் , ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Sorry, no posts matched your criteria.