India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினத்தில் விநாயக சதுர்த்தி முன்னிட்டு வரும் ஏழாம் தேதி 32 அடி உயரம் உள்ள விஸ்வரூப அத்தி விநாயகர் ஊர்வலம் நாகையிலிருந்து நாகூர் வரை நடைபெற உள்ளது. விழாவில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென விஸ்வரூப விநாயகர் குழு நிர்வாகிகள் எஸ்பியிடம் இன்று அழைப்பிதழ் வழங்கினர்.
வேளாண் பொறியியல் துறை மற்றும் தனியார் வேளாண் எந்திரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் பராமரிப்புகள் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாமை வருகின்ற 4ஆம் தேதி காலை 10 மணி அளவில் நாகை அவுரிதிடல் வளாகத்தில் நடத்துகின்றன. இதில் விவசாயிகள் பங்கேற்று பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
தாணி கோட்டகம் பிச்சை கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய திலகவதி என்பவரது வாரிசுதாரர் சிவாவதி என்பவருக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நேற்று வழங்கினார்.
நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளி பெண் ஒருவருக்கு திருமண திட்டத்தின் கீழ் எட்டு கிராம் தங்க நாணயத்தினை மாவட்ட ஆட்சி தலைவர் ப. ஆகாஷ் வழங்கினார். அப்போது சமூக நலத்துறை துணை ஆட்சியர் கார்த்திகேயன் உடனிருந்தார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், இ.கா.ப. அவர்கள் மற்றும் அரசு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 144 மாணவ மாணவிகளுக்கு சதுரங்க போட்டிக்கான சிறப்பு பயிற்சி “செஸ் பிஷப்” என்ற நிறுவனம் மூலம் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா. ஆகாஷ் கூறியுள்ளார். இது தொடர்பான ஆயத்த கூட்டம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நாளை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.
வேதாரணியம் அருகே உள்ள கோடியக்கரை கடல் பகுதியில் இரண்டு டப்பாக்களில் பவுடர் வடிவிலான மர்ம பொருள் நேற்று கரை ஒதுங்கி கிடந்தது. டப்பாக்களில் இருந்த பவுடர் மெத்தபெத்தமைன் போதைப் பொருளா? எனும் கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பவுடரை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்து வேதாரண்யம் கடோலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம் அருகே மருதூர் வடக்கு வழியன்செட்டிக்கட்டளை பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள்(70). நேற்று முன் தினம் அவரது வீடு அருகே நாகம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து அதே ஊரை சேர்ந்த ராசாக்கண்ணு (30) என்பவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர் நகைக்காக மூதாட்டியை கழுத்தை அறுத்த கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ எனும் குழந்தைகளுக்கான பாடல் போட்டி ஆடிஷன் நாளை (செப்.2) நாகப்பட்டினத்தில் உள்ள ஈ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் 6 வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி அடுத்த மாத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி மகள் ஹேமாதனிஷ்கா (13). தந்தையின் சகோதரரான பாலகிருஷ்ணன் கடந்த 12 ஆண்டுகளாக சிறுமி வளர்த்து வந்தார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய போது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்த வந்த போலீசார் உடலை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.