Nagapattinam

News September 8, 2024

வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி

image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. காலை 6.00 மணிக்கு விண்மீன் ஆலயத்தில் தஞ்சை ஆயர் சகராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. மாலை 6:00 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசி தமிழ் திருப்பலி ஆகியவை நிறைவேற்றப்படுகிறது.

News September 7, 2024

நாகையிலிருந்து இலங்கைக்கு இனி சனிக்கிழமையும் கப்பல் சேவை

image

நாகபட்டினம் – இலங்கை – காங்கேசன்துறை இடையிலான சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை, செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பயணிகளின் வசதிக்கேற்ப, வரும் 21ஆம் தேதி முதல் கப்பல் சனிக் கிழமைகளிலும் இயக்கப்படும் என இந்திய பயணிகள் கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

News September 7, 2024

நாகை மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வங்க கடலின் கரையோர பகுதியில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்றடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே நாகை மீனவர்கள் அனைவரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், மேலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

News September 7, 2024

நாகை அத்தி விநாயகர் ஊர்வலம் ஏற்பாடுகள் தீவிரம்

image

நாகப்பட்டினத்தில் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி அன்று 32 அடி விநாயகர் நகர்வலம் கோலாகலமாக நடைபெறும். அதுபோல இந்த வருடமும் 32 அடி அத்தி விநாயகர் நகர்வலத்தை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று (செப்.6) நகர்வலத்திற்கு இடையூறாக இருக்கும் மரங்கள் வெட்டும் பணி நிறைவுற்றது. இன்று (செப்.7) மாலை 6 மணிக்கு நகர்வலம் நீலாயதாட்சி அம்மன் ஆலயத்திலிருந்து ஊர்வலம் தொடங்கும்.

News September 7, 2024

நாகையில் விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10.09.2024 ஆம் தேதி முதல் 24.09.2024 ஆம் தேதி வரை முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பித்த 12 வயது முதல் 19 வயது வரை உள்ள விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த போட்டிகள் நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் நடைபெறுகின்றன.

News September 7, 2024

நாகை வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு

image

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (செப்.7) நடைபெற இருந்த பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகாம் மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

வேதாரண்யம் எம்எல்ஏ ஓஎஸ் மணியன் வேண்டுகோள்

image

பேரறிஞர் அண்ணாவின் 116-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகிற 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நாகை மாவட்டத்தின் அனைத்து அதிமுக ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டுகளிலும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், கழகக் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கிட வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.

News September 7, 2024

தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம்.

image

நாகை மாவட்டத்தில் அகில இந்திய தொழிற்தேர்வில் தனி தேர்தர்களாக, வரும் 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் பயிற்சிக்கு கலந்து கொள்ள தகுதி உடையவர்கள் (www.skilltraining.tn.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

நாகையில் நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு

image

டாடா எலக்ட்ரானிக் குழுமம் சார்பாக பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாகையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் 07.09.2024 அன்று நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

நாகை மாவட்ட மீனவ இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

image

வெள்ளப்பள்ளம், அண்ணா பேட்டை மீனவ கிராமங்களில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள சாகர் மித்ரா பணி இடங்களுக்கு சம்பந்தபட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 35 வயதுக்குட்பட்ட, இளங்கலை பட்டப்படிப்பில் மீன் வள அறிவியல் கடல் உயிரியல் விலங்கியல் படித்தவர்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் நாகை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!