Nagapattinam

News March 13, 2026

நாகை: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

நாகை மக்களே, உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<> இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News March 13, 2026

BREAKING நாகை: அதிமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி

image

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த நாகையை சேர்ந்த காளியம்மாள் கடந்த ஆண்டு நாதக-வில் இருந்து விலகினார். இந்நிலையில் இன்று (மார்ச் 13) காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். காளியம்மாள் தவெக-வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்த இணைவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

நாகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

இந்திய ராணுவத்தில் காலியாக உலா ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல் டியூட்டி, கிளர்க், ஸ்டோர் கீப்பர் போன்ற பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 17 1/2 – 22 வயது வரை உள்ள இளைஞர்கள் ஏப்.1-க்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News March 13, 2026

நாகை: பைக் வாங்க விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

image

உலமாக்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 16 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25,000-லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 12) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 12, 2026

நாகை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

நாகை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<> Mparivahan<<>> என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

News March 12, 2026

நாகை: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

நாகை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News March 12, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான விலை நிர்ணயக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் உள்ளனர்.

error: Content is protected !!