India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் இன்று சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினம் மாவட்ட ஆட்சியரகத்தில் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார். அப்போது மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன் உடனிருந்தார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ், விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன், குறைந்த வட்டியில் கடனாக பெற்று வாங்கலாம்.என ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
கால்நடை சார்ந்த கோழி பண்ணை செம்மறி மற்றும் வெள்ளாடு, பன்றி பண்ணை அமைத்தல், தீவன மதிப்பு கூட்டல் போன்ற தொழில் மேற்கொள்ள மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர், விவசாய உற்பத்தி அமைப்புகள் தனியார் மற்றும் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
வீடுகளில் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் நூலகம் அமைத்து சிறப்பாக பராமரித்து வரும் தனி நபர்கள் தங்களது சிறந்த நூலக பரிசுக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் தனி நூலகத்திற்கு அரசு சார்பில் ரூ.3000 மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு வருகிற 30ஆம் தேதிக்குள் நூலகம் குறித்த விவரங்களை 9150658877 என்ற எண்ணிற்கு அனுப்ப ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
கலை பண்பாட்டு துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான குரலிசை பரதநாட்டியம் ஓவியம் மற்றும் கிராமிய நடனம் உள்ளிட்ட கலைப் போட்டிகள் 6.10.2024 அன்று நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில் முதலிடம் பெறுவோர் மாநில போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். ஆர்வமுள்ளோர் அன்றைய தினம் காலை 9 மணிக்கு போட்டி நடக்கும் இடத்திற்கு ஆதார் அட்டையுடன் வர ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் பெண்கள், பெண் குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்தி அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் குற்றங்களை தடுக்க ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என நேற்று மாலை போலீசாருக்கான ஆய்வு கூட்டத்தில் எஸ்.பி. அருண் கபிலன் அறிவுரை வழங்கினார்.
நாகை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி விற்பனை இலக்கு இந்த ஆண்டு ரூ.50 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தீபாவளி பண்டிகையின் போது மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு ஊழியர்களும் கோ-ஆப்டெக்சில் துணிகள் எடுத்து கைத்தறி நெசவாளர்களுக்கு கை கொடுத்து உதவ வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகை மாவட்டம் ஆரிய நாட்டுத் தெருவை சேர்ந்த மீனவர் பன்னீர்செல்வன், ஹெல்மெட் அணியாமல் காரில் சென்றதாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓலக்கூர் போலீசார் அபராதம் விதித்தனர். மூன்று மாதமாக தார்பாய் போட்டு மூடியபடி நாகையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு விழுப்புரத்தில் ஹெல்மெட் போடாமல் கார் ஓட்டியதாக போலீசார் அபராதம் விதித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் துணைமின் நிலையத்தில் நாளை (செப்.26) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், நாகை நகரம், பீச் லையன், மேலக்கோட்டையாசல், அக்கரைப்பேட்டை கீச்சாகுப்பம், சால்ரோடு, புத்தர், மஞ்சக்கொல்லை, சிக்கல், பரவை, தெத்தி மற்றும் நாகூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் உள்ள நவநீதேசுவர கோயிலுக்கு சொந்தமான பணியாளர் குடியிருப்புகளில் நாகப்பட்டினம் இணை ஆணையர் அவர்கள் தலைமையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. காவல்துறை பாதுகாப்போடு இலாகா முத்திரையிடப்பட்டு கோயில் வசம் ரூ.2.30 கோடி மதிப்புடைய 11,000 சதுரடி கொண்ட இடம் ஒப்படைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.