India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆக்கூர் அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற கூலித் தொழிலாளியின் மகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் நீலகிரி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி சந்திரோதயா, 2 முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்து 3வது முறையாக தேர்ச்சி பெற்றுள்ளார். எத்தனை முறை தோல்வி என்பது முக்கியமல்ல, யாருக்காக படிக்கின்றோம் என்பது முக்கியம் என அவர் தெரிவித்தார்.
சீர்காழி அருகே திருவெண்காட்டில் நவகிரகங்களில் புதன் பரிகார ஸ்தலமான பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரணேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பிரபல நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி நேற்று வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தார். அம்மாள் சன்னதிகளில் அர்ச்சனை செய்து வழிபட்டார். பின்னர், கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறையில் மாபெரும் இலவச இருதய மருத்துவ ஆலோசனை முகாம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சிவபுரம் வேத சிவகாம பாடசாலையில் நடைபெற உள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் பலர் பங்கேற்க உள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்குமாறு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியர்களின் குறைகளைத் தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓய்வூதியர்கள் ஓய்வூதியம், காப்பீடு தொகை உள்ளிட்டவைகள் தொடர்பாக 20 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர். இக்கூட்டத்தில் ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர் கமலநாதன், மாவட்ட கருவூல அலுவலர் தாயுமானவன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு புதியதாக நான்கு மகப்பேறு மருத்துவர்கள் நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பரிந்துரை செய்த சுகாதாரத்துறை இயக்குனர் ஜெயமூர்த்தி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சோழம்பேட்டை பகுதியில் லிப்ட் கேட்டு வந்த நபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், மாப்படுகை பகுதியை சேர்ந்த குகன் என்பவர் சோழம்பேட்டை காவிரி சட்ரஸ் அருகே கைது செய்து அழைத்து வரும்போது வழுக்கி விழுந்ததில் கை முரிந்தது பின்னர் மாவு கட்டு போடப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருவாலங்காடு பகுதியில் சமீபத்தில் வெடி விபத்து ஏற்பட்டது இதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் இருவர் சிகிச்சை பெற்று வந்தனர் இந்த நிலையில் இன்று அதிகாலை தஞ்சாவூரில் சிகிச்சை பெற்று வந்த குமார் என்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே மணல்மேடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சாக்கு முட்டைகளில் மணல் திருடி கொண்டு இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சென்றது தெரியவந்தது. இதனிடையே போலீசாரைக் கண்டதும் இருசக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு 6 பேர் தப்பித்து ஓடினர். மேலும் ஐயப்பன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்த நிலையில் மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஐடிஐ படித்த மாணவர்கள் ஆகஸ்ட் 29, 30 ஆகிய நாட்களிலும், 12ஆம் வகுப்பு மற்றும் கலை அறிவியல் முடித்த மாணவர்கள் செப்டம்பர் 6, 7 ஆகிய தேதிகளிலும் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04364299790 எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சியில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வரும் ரயில் வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி குத்தாலத்துடன் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று மதியம் 12 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு திருச்சி, மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் ரயிலானது குத்தாலம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.