India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் இருந்து செப்டம்பர் 12 ஆம் தேதி இன்று முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை பகல் 12 மணிக்கு செங்கோட்டை செல்லும் ரயிலானது மயிலாடுதுறையில் இருந்து புறப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் குத்தாலம் ரயில் நிலையத்திலிருந்து 12.13 மணிக்கு ரயில் புறப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடியில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வந்து சேரும் ரயில் மற்றும் மாலை 5.15 மணிக்கு மன்னார்குடி செல்லும் ரயில் செப்டம்பர் 11ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் திருவாரூரில் காலை 8.15 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு வந்து சேரும் ரயிலும் மேற்குறிப்பிட்டுள்ள தேதியில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை ஒன்பது மணிக்கு வந்து சேரும் வகையில் செப்டம்பர் 12 முதல் 15ஆம் தேதி வரை குத்தாலத்துடன் நிறுத்தப்படும் எனவும் மயிலாடுதுறை ரயில் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மயிலாடுதுறையில் இருந்து காலை 12 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயில் காலை குத்தாலத்தில் இருந்து 12.13 புறப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது.
குத்தாலம் வட்டத்தில் செப்.18 ஆம் தேதி அன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
குத்தாலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனந்தநல்லூர் ஊராட்சியில் முதலமைச்சரின் சாலை திட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள அனந்தநல்லூர் கந்தமங்கலம் சாலையை மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் ஷபீர் ஆலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷோபனா புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மயிலாடுதுறை வட்டாரத்திற்கு வருகின்ற செப்டம்பர் 12 ஆம் தேதி காலை 11 மணியளவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதேபோன்று செப்].27ஆம் தேதி சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் புகழ்பெற்ற செவ்வாய் பரிகார ஸ்தலமான வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நேற்று பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி அம்பாள் செல்வ முத்துக்குமாரசாமி அங்காரகன் சன்னதிகளில் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். கோவில் நிர்வாகத்தினர் அவருக்கு பிரசாதங்கள் வழங்கினர்.
மயிலாடுதுறை மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றும் செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முதன்மை வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் வழங்கப்படும் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார். அதன்படி, மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில் ஆகிய 5 முதன்மை வேளாண் விரிவாக்க மையங்களிலும் இ-சலான், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவை மூலம் தொகையை பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும்.
மயிலாடுதுறையில் “நான் முதல்வன் திட்டத்தின் உயர்வுக்கு படி” வழிகாட்டுதல் நிகழ்ச்சி செப்.10 ஆம் தேதி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மயிலாடுதுறை தாலுகாவில் தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதேபோன்று செப்.13 ஆம் தேதி சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.