Mayiladuthurai

News September 22, 2024

மீனவர்களை விடுவிக்க ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது சர்வதேச கடல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மகாபாரதியை மீனவ கிராம பிரதிநிதிகள் மற்றும் உறவினர்கள் இன்று நேரில் சந்தித்தனர். தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி மனு வழங்கினர்.

News September 22, 2024

இலங்கை துணை தூதரகம் முன் போராட்டம் நடத்தப்படும்

image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களை விடுவிக்க 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் எம்பி சுதா, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

News September 22, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த சில மீனவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபட முயற்சி செய்து வருகின்றனர். மேலும் யாரேனும் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த முயன்றாலோ அல்லது பயன்படுத்தினாலோ உடனடியாக படகு மற்றும் வலை பறிமுதல் செய்வதுடன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News September 21, 2024

மயிலாடுதுறை எம்.பி. பாஜக அரசு மீது குற்றசாட்டு

image

மயிலாடுதுறையில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்து பேசிய மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. ஆர்.சுதா மத்திய அரசின் 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா முழுவதும் 12 கோடி பேர் வேலைவாய்ப்பு இழந்துள்ளதாகவும், இதுதான் பாஜக அரசின் சாதனை என கூறினார். ஆண்டுக்கு 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்து பத்து ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை என்று கூறினார்.

News September 21, 2024

மயிலாடுதுறை ஆட்சியர் அதிகாலையில் ஆய்வு

image

குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் இன்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். அதிகாலை 4.30 மணி அளவில் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்களின் தினசரி வருகை பதிவு செய்யும் பணியினை சரிபார்த்தார். இந்த நிகழ்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News September 21, 2024

சீர்காழி அருகே முதியவர் கொலை

image

சீர்காழி அருகே கோயில்பத்து மெயின் ரோட்டை சேர்ந்தவர் முஹம்மது ரபீக் (55). அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார் இந்நிலையில் நேற்று இரவு கடை வாசலில் முகமது ரபீக் கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து சீர்காழி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

News September 20, 2024

மயிலாடுதுறையில் சிறப்பு பேருந்து இயக்கம்

image

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கல்லூரியில் செப்டம்பர் 21 நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட பழைய பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

மயிலாடுதுறை கலெக்டர் அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27 ஆம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ள நிலையில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.

News September 19, 2024

மயிலாடுதுறை திருநங்கைகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கையர்களில் கல்வி பயின்று இடையில் நிறுத்திய திருநங்கைகளை கண்டறிந்து அவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு தகுதியான திருநங்கையர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. எனவே மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி திருநங்கைகள் பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News September 19, 2024

குத்தாலத்தில் திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை

image

மாதிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வசந்தன் (34). கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி இரவு திருமணமாகாத விரக்தியில் தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை பிராந்தியில் கலந்து குடித்துள்ளார். மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பின்னர் பாண்டிச்சேரி ஜிப்மரில் சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

error: Content is protected !!