Mayiladuthurai

News March 31, 2024

மயிலாடுதுறையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

image

மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தொடர்ந்து திமுக பொதுக்குழு உறுப்பினர் அர்ஷத் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News March 31, 2024

மயிலாடுதுறையில் 31 லட்சம் வரை பணம் பறிமுதல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக எடுத்துச்செல்லப்பட்ட ரூ.31 லட்சத்து 74 ஆயிரத்து 145 இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மகாபாரதி இன்று(மார்ச்.31) தெரிவித்துள்ளார். மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

News March 31, 2024

திருச்சபையில் அமைச்சர், எம்எல்ஏக்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

image

சீர்காழியில் திருச்சபை மற்றும் வழிபாட்டு தலங்களிலிருந்து வழிபாட்டை நிறைவு செய்து வந்த பொதுமக்களிடம் அமைச்சர் மெய்ய நாதன், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார். திமுக நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதா அறிமுகம் செய்து வைத்து வாக்குகள் சேகரித்தனர்

News March 31, 2024

இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் எவ்வித பதற்றமும் இல்லாமல் முறையாக தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஆட்சியர் கூறியுள்ளார்.

News March 31, 2024

மயிலாடுதுறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பான விவரங்களை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வாக்காளர் தொடர்பு மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவையான விபரங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

மயிலாடுதுறையில் பேராசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

image

மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் ஆங்கிலத்துறையில் 33 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நல்லமலை பேராசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

News March 30, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் ,மாற்றுத்திறனாளிகளுக்கு 12D தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டு வாக்குகள் பெறப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 7749 வாக்காளர்களுக்கும் 10478 மாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கும் 12D தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

மயிலாடுதுறை அருகே சுவர் விளம்பரம் பணி துவக்கம்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபுவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி மகாராஜபுரம் பகுதியில் வீடுகளில் உள்ள சுவர்களில் விளம்பரம் இன்று செய்யப்பட்டது. தொடர்ந்து நிர்வாகிகள் இரட்டை இலை சின்னம் மற்றும் வேட்பாளரின் பெயரை சுவரில் வரைந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

News March 30, 2024

மயிலாடுதுறை வாக்காளர்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி ஊராட்சி அளவில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி, ரங்கோலி கோலம் இடுதல், வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இத்தேர்தலில் வாக்காளர்கள் தவறாது வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் பணியிலிருந்து மருத்துவ சிகிச்சை காரணமாக விலக்கு கோரி மனு வழங்கியவர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.