Mayiladuthurai

News October 4, 2024

சீர்காழியில் அரசு பேருந்து மோதி இளம்பெண் பலி

image

சீர்காழி அருகே மருதங்குடி கீழவரவுகுடியை சேர்ந்தவர் பவித்ரா(21). இவர் இன்று திருமுல்லைவாசலிலிருந்து சீர்காழி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது செம்மங்குடி செல்லும் சாலையில் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பவித்ராவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 4, 2024

மேமாத்தூர் பகுதியில் நாளை மின்தடை

image

மேமாத்தூர் துணை மின்நிலையத்தில் நாளை (அக்.5) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனையொட்டி கீழ்மாத்தூர், வாழ்க்கை, வல்லம், பெரியமடப்புரம், மேமாத்தூர், சாத்தனூர், மேலக்கட்டளை, பரசலூர், ஆறுபாதி, விளநகர் மேலபரசலூர், ஆணைமட்டம், கடலி, நரசிங்கநத்தம், ஒட்டங்காடு, பெருங்குடி, ஈச்சங்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்

News October 3, 2024

மயிலாடுதுறையில் புகார் அளிக்க எண் அறிவிப்பு

image

செம்பனார் கோவிலில் நேற்று நடைபெற்ற காந்தி ஜெயந்தி கிராம சபா கூட்டத்தில் பங்கேற்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மேடையில் பேசியபோது, மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை அறிந்தால் பொதுமக்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 1077 மற்றும் 7092255255 என்ற whatsapp எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என கூறினார்.

News October 2, 2024

மயிலாடுதுறை கலெக்டர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு சம்பா சாகுபடி , உளுந்து மற்றும் பச்சை பயறு ஆகியவற்றிக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் வேளாண்மைதுறை, புள்ளியியல் துறை, பயிர் காப்பீடு நிறுவனம் அரசின் வழிகாட்டுதலின் மட்டுமே பயிர் காப்பீடு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

News October 2, 2024

மயிலாடுதுறை இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2/2A தேர்வின் முதன்மை எழுத்து தேர்விற்கு மயிலாடுத்துறையில் இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து ஆர்வமுள்ள இளைஞர்கள் 9499055904 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.

News October 1, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை தினத்தன்று 241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடர்பான விவரங்களை விவாதித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 1, 2024

மயிலாடுதுறையில் மதுக்கடைகளை மூட அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் FL1/FL2/FL3/FL3A/FLIM மற்றும் FL11 உரிமம் பெற்ற கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் வருகின்ற 02.10.2024 அதாவது நாளை காந்தி ஜெயந்தி அன்று தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி. மகாபாரதி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News October 1, 2024

மயிலாடுதுறை ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்

image

மயிலாடுதுறையிலிருந்து தினசரி காலை 6.20 மணிக்கு திருச்சி வழியாக சேலம் செல்லும் ரயில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 8 பெட்டிகளில் இருந்து 12 பெட்டிகளாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது. இது தொடர்பாக ரயில் பயணிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய நிலையில் தற்போது கோரிக்கை நிறைவேறியுள்ளதால் ரயில் பயனாளர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News September 30, 2024

மயிலாடுதுறை விவசாயிகளுக்கு அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய பண்ணை குட்டைகள் வேளாண் பொறியியல் துறை சார்பில் அமைத்து தரப்படுகிறது. 2024 -2025 ஆம் ஆண்டுக்கு KAVIADP திட்டத்தின் கீழ் குத்தாலம் வட்டாரம் பெரம்பூர் பெருஞ்சேரி தத்தங்குடி கொக்கூர் தொழுதாலங்குடி தேரழந்தூர் திருமணஞ்சேரி அசிக்காடு கிராம விவசாயிகள் வேளாண்துறை உதவி பொறியாளர் செந்தில்குமார் 9965056209 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News September 30, 2024

மயிலாடுதுறையில் பயிர் காப்பீட்டுக்கு தொலைபேசி எண் அறிவிப்பு

image

தற்போது சம்பா நெல் பருவம் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் பயிர்களுக்கு பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு 14447 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு பயன் பெறலாம் என மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!