Mayiladuthurai

News April 8, 2024

சிறுத்தை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை

image

மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்க தீவிர முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சிறுத்தையை பற்றி பொய்யான வதந்திகளை பொதுமக்கள் அச்சப்படும் வகையில் சிலர் பரப்புவதால் அதனை நம்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2024

மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை

image

மயிலாடுதுறையில் சிறுத்தையை கண்டறிய கோவை WWF- India நிபுணர் குழு 30 கேமரா ட்ராப்புகளுடன் களமிறங்கியது. சிறுத்தை நடமாட்டத்தை விஞ்ஞானப்பூர்வமாக கண்டறிய களப்பணியாளர்களுடன் கூட்டாக பணிகள் தீவிரமடைந்துள்ளது. நண்டலாறு – வீரசோழன் ஆறு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை குறைக்க வனத்துறை தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

News April 8, 2024

மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிப்பதில் தீவிரம்

image

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டமானது ஆறு மற்றும் ஓடை ஓரங்களில் குறிப்பாக மஞ்சளாறு , மகிமலையாறு , பழைய காவேரி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோமல், காஞ்சிவாய் பகுதியில் சிறுத்தையை நேரில் பார்த்ததாக பொதுமக்கள் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் சிறுத்தையின் அடையாளம் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2024

50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் பூதனூரில் உள்ள அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் இல்லத்தில் நேற்று தலைவுடையார் கோவில் பத்து ஊராட்சியை சேர்ந்த பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர் அவர்களுக்கு அதிமுக சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு.

News April 8, 2024

சந்திரபாடி ஊராட்சியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் செம்பனார்கோவில் ஒன்றியம் சந்திரபாடி ஊராட்சியில் மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் பாபுவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று நேற்று இரவு துண்டு பிரசுரங்கள் வழங்கி அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

News April 7, 2024

சிறுத்தை நடமாட்டம்‌: வனத்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வந்து நிலையில், சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குத்தாலம் அருகே காஞ்சிவாய் கிராமத்தில் இன்று சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்டது. மேலும் சிறுத்தையின் காலடித்தடங்கள் உள்ளதால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

News April 7, 2024

மயிலாடுதுறை தாய்மார்களுக்கு அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் பதற்றம் நிலவி வருகிறது.இதனிடையே மனிதர்களின் அருகாமையை சிறுத்தையானது தவிர்க்கும் என்றும் சிறு விலங்குகளை மட்டுமே வேட்டையாட கூடிய தன்மை உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என வனத்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அதிகாலை நேரங்களில் கண்டிப்பாக 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

News April 7, 2024

மயிலாடுதுறை: சிதம்பரத்தில் முதல்வர்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுதா சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் தொல் திருமாவளவன் ஆகியோரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

News April 7, 2024

மயிலாடுதுறையில் அதிரடியாக சோதனை

image

மயிலாடுதுறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு துப்பறியும் மற்றும் அகற்றும் படையினர், காவலர்கள் ரயில்வே நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க நேற்று சோதனை மேற்கொண்டனர். சந்தேகப்படும் வகையில் யாரேனும் பொது இடங்களில் சென்றாலும் அல்லது தங்கியிருந்தாலும் 8438456100 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News April 7, 2024

மயிலாடுதுறை: சிறுத்தையின் புகைப்படம் வெளியீடு

image

மயிலாடுதுறையில் தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் புகைப்படம் இன்று வெளியாகி உள்ளது. தொடர்ந்து கடந்த மூன்றாம் தேதி செம்மங்குளம் பகுதியை சுற்றி பொருத்தப்பட்ட தானியங்கி கேமராவில் சிறுத்தையின் உருவம் தெளிவாக கிடைக்கப்பெற்றுள்ளதாக‌ வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிர படுத்தப்பட்டுள்ளது.