Mayiladuthurai

News October 21, 2024

மயிலாடுதுறையில் பெறப்பட்ட மனுக்களின் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மொத்தமாக பொதுமக்களிடமிருந்து 218 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

News October 21, 2024

சீர்காழியில் போலீசாரை தள்ளிவிட்ட நபர் கைது

image

சீர்காழி புறவழிச்சாலை கோயில்பத்து பகுதியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் SSI செந்தில் ஆகியோர் வாகன தணிக்கை செய்தனர் அப்போது அகனி பகுதியைச் சேர்ந்த மங்களதாசன் என்பவர் மது போதையில் உள்ளாரா என சோதனை செய்ய முயன்ற போது அவர் எஸ் எஸ் ஐ செந்திலை தள்ளிவிட்டது சோதனை செய்யும் கருவி சேதம் அடைந்தது இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து மங்களதாசனை கைது செய்தனர்

News October 21, 2024

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர்

image

 குத்தாலம் காவல் துறை சரகத்திற்கு உற்பட்ட ஆணைக்காரன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (27). இவர் அப்பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

News October 20, 2024

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்டோபர்-20, 21, 22 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 19, 2024

மயிலாடுதுறை வழியாக சிறப்பு ரயிகள் இயக்க எம்.பி கோரிக்கை

image

தீபாவளியை முன்னிட்டு காரைக்குடி-புதுக்கோட்டை-தஞ்சை-மயிலாடுதுறை வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்க மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா இரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் சிறப்பு ரயில்கள் இயக்கத்தில் காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை தடம் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சட்டியுள்ளார்.

News October 19, 2024

மயிலாடுதுறை பெயர் காரணம்

image

பார்வதி தேவியார் மயிலாக வடிவம் எடுத்து காவிரி ஆற்றுத்துறையில் ஆடி சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் குறிப்பிடபட்டுள்ளதால் இப்பகுதி மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. 18-ஆம் நூற்றாண்டு வரை “மயூரபுரம்” என்றும், பின்பு “மாயவரம்” என்றும் அழைக்கப்பட்ட இந்நகரம் 1982-இல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது “மயிலாடுதுறை” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. SHARE & COMMENT!

News October 19, 2024

மயிலாடுதுறை: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத அதிசய கிராம

image

சீர்காழி அருகே பெரம்பூர் கிராமத்தில் பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த ஆலமரத்தில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வௌவ்வால்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் வவ்வால்கள் இப்பகுதி விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வெடி வெடிக்காத தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். ஷேர் செய்யவும்

News October 19, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தரங்கம்பாடி, சீர்காழி, திருவாடுதுறை உள்ளிட்ட பிற பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 19, 2024

மயிலாடுதுறையில் 12 கடைகளுக்கு ரூ.5,000 அபராதம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கூலிப், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சிறுவர்களுக்கு எளிதாக கிடைப்பதாக மீனவ பெண்கள் பேரவையினர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். அதன்படி, நேற்று நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சிகரெட் விற்பனைக்காக விதிமுறைகளை பின்பற்றாத 12 கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News October 18, 2024

கொள்ளிடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

image

கொள்ளிடம் அடுத்த ஆணைக்காரன் சத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுரேந்திரன் (27) என்பவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி சுரேந்திரனை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி எஸ்பி அறிவுறுத்தலில் குண்டர் தடுப்பு சட்டத்தில் இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!