India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சிறப்புரையாற்றினார். அப்போது எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தயவுசெய்து மோடிக்கு வாக்களிக்காதீர்கள் என தெரிவித்தார். மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறது பாஜக அரசு. ஒரே தேர்தல் நடத்தினால் நாட்டில் வறுமை ஒழிந்துவிடுமா எனவும், ஒரே நாடு என்றால் தண்ணீர் ஏன் நம் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
சீர்காழியில் தேவார பாடல்பெற்ற ஸ்ரீ சட்டைநாதர் கோயில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பிரம்மதீர்த்தம் கரையில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டியதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் திருமுலைப்பால் விழா நடைபெறும். அவ்வாறு இன்று காலை சட்டை நாதர் கோயில் தீர்த்தக்கரையில் திருமுலைப்பால் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர்
ஆர்.சுதா கை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையடுத்து மயிலாடுதுறையில் 30 ஆண்டுகளுக்கு முன்னாள் மூடப்பட்ட மயிலாடுதுறை மற்றும் தரங்கம்பாடி ரயில் தடத்தை சீரமைத்து காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு பயணிகள் பயணம் செய்ய ஏதுவாக அமைத்துத்தரப்படும் என வேட்பாளர் சுதா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். விடுமுறை நாளான இன்று கடற்கரையில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரையபுரத்தில் ஸ்ரீ சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 27 ஆம் ஆண்டு சித்திரை பெருவிழா பால்குடதிருவிழா இன்று நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையில் இருந்து பால்குடங்கள், காவடி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபின் தற்போது வரை 400 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 406 குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளிடம் இருந்து 8437 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் 3534 பாண்டி மது பாட்டில்கள் 1084 தமிழ்நாடு மது பாட்டில்கள் மற்றும் 3 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட ஆச்சாள்புரம் பகுதியை சேர்ந்த மகாலெட்சுமி என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது 9626169492 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் தலைமையில் திருச்சி ரயில்வே உயர் அதிகாரி ஹரிகுமாரை இன்று சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடிக்கு புதிய ரயில் சேவையை துவங்க வேண்டும் என அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நாகை மாவட்ட செயலாளர் கொற்றவமூர்த்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களை சந்தித்து மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான பாமக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தனது வாக்கினை தபால் ஓட்டு மூலம் இன்று பதிவு செய்தார். அப்போது, தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு காவல் அதிகாரிகளும் தங்களது வாக்கினை செலுத்தினர்.
Sorry, no posts matched your criteria.