India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த 21 ஆண்டுகளாக இயங்கி வந்த மயிலாடுதுறை-கோயம்புத்தூர் ஜனசதாப்தி விரைவு வண்டி இன்றுடன் விடைபெறுகிறது. இந்நிலையில் நாளை (டிச.28) முதல் புதிய வடிவத்தில் LHB பெட்டிகளுடன் புதிய ரயிலாக இயக்கப்பட உள்ளது. பழைய பெட்டிகளுடன் ஒப்பிடும் போது LHB பெட்டிகளில் மூலம் பயணிகளுக்கு அதிகளவிலான வசதிகள் கிடைக்கும் என்பதால் மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட 5 கார்கள் & 68 டூவீலர்கள் என மொத்தம் 73 வாகனங்கள் வரும் ஜன.2-ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளதாக மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் ஜன.1-இல் அதற்கான அனுமதி சீட்டுகளை பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 27ஆம் தேதி 10.30 மணியளவில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ள நிலையில், விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் ஒன்றியம், திருக்கடையூர் அருகே மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது லாரியை பாதி வழியில் நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓடினார். பின்னர் லாரியை சோதனை செய்ததில் அனுமதியின்றி சவுடு மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து பொறையாறு போலீசார் வழக்கு பதிந்து லாரியை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த டிச.16 முதல் டிச.22 வரை மாவட்ட காவல்துறை, உணவு பாதுகாப்பு துறை நடத்திய கூட்டாய்வில் 1103 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, 1.5 கிலோ கஞ்சா, 98 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 30 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை திருவிழந்தூரை சோ்ந்தவா் ஷிபானா ஜாஸ்மின்(28). இவர் திருவாவடுதுறை பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த ஜாகீா் உசேன் (23) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதில் ஷிபானா கருவுற்ற நிலையில் ஜாகீா் உசேன் திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும் அவரிடமிருந்து பல்வேறு தவணைகளில் 14 சவரன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை பெற்ற ஜாகீர் உசேன் மீது, புகாரின் பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெல்லியில் நடைபெற்ற UCMAS ABACUS INTERNATIONAL CHAMPIONSHIP போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்ற பள்ளி மாணவர் சஞ்சய்ராம், ஆட்சியரிடம் இன்று வாழ்த்து பெற்றார். இதில் பள்ளி நிர்வாக இயக்குனர் மோகன்ராஜ், மாணவரின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.
சீர்காழி முழு நேர கிளை நூலகத்தில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டமாக, திருக்குறள் தொடர்பான கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தகங்கள், திருக்குறள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். இதில் அரசு அதிகாரிகள் பலர் கண்காட்சியை பார்வையிட்டனர்.
ஜனவரி14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஜனவரி 15 மற்றும் 16 தேதிகளில் யுஜிசி நெட் தேர்வு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா, யுஜிசி நெட் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு இன்று (டிச.22) கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொது நூலக இயக்ககம், சீர்காழி முழு நேர கிளை நூலகம் சார்பில் அப்பன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருஉருவச் சிலை நிறுவிய வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்ட துவக்க விழா நிகழ்ச்சி சீர்காழி நூலகத்தில் நாளை (டிச.23) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி கலந்து கொண்டு, திருவள்ளுவர் திருவுருவப்படம் மற்றும் திருக்குறள் தொடர்பான கண்காட்சி தொடங்கி வைக்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.