Mayiladuthurai

News December 30, 2024

மயிலாடுதுறை: வீட்டில் 30 கிலோ குட்கா பதுக்கல்; அதிரடி கைது

image

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலை சின்ன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி (40). இவர் வீட்டில் குட்கா பதுக்கிவைத்திருப்பதாக மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அவரது வீட்டில் சோதனை செய்த போலீசார், மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கொளஞ்சியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News December 30, 2024

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

image

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் புறநோயாளிகளிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறித்தும், மருந்தகத்தில் உள்ள மருந்து கையிருப்பு குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

News December 29, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் 3,603 நபர்கள் கைது

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் சட்ட விரோத மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 3,547 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,603 நபர்கள் கைது செய்யப்பட்டு, 74,975 லிட்டர் மதுபான வகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்திய 41 இருசக்கர வாகனங்கள் மற்றும் 8 நான்கு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News December 29, 2024

மாநில அளவிலான போட்டியில் சீர்காழி ஆசிரியர் சாதனை

image

ஈரோட்டில் 39ஆவது மாநில மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சீர்காழி சபாநாயகர் முதலியார் பள்ளி முதுகலை கணித ஆசிரியர் பத்ரிநாராயணன் 5 கி.மீ. நடை போட்டியில் பங்கேற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் வென்ற ஆசிரியருக்கு சக ஆசிரியர்கள் மற்றும் சீர்காழி பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News December 29, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 கொலைகள்: எஸ்.பி தகவல்

image

2024-ஆம் ஆண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 13 கொலைகள் நடைபெற்றுள்ளதாக மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதில் 12 கொலைகள் உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் நிகழ்ந்தவை ஆகும். மேலும் திருட்டு, போதைப்பொருள் விற்பனை, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பாலியல் குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபட்ட 47 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

News December 28, 2024

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

News December 28, 2024

இலங்கையில் தருமபுரம் ஆதீனம் சுவாமி தரிசனம்

image

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து தனுர் மாதத்தை முன்னிட்டு ஸ்ரீ கேதீச்சர பெருமாள் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

News December 28, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 6 ஆவது சுற்று கால் மற்றும் வாய்நோய் இலவச தடுப்பூசி முகாம், 03.01.2025 முதல் 31.01.2025 வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது. தொடர்ந்து கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News December 27, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாரத்தான் போட்டி

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டிகள் வரும் ஜன.1 அன்று காலை 8.00 மணி அளவில் நடைபெறவுள்ளது. இந்த மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் ஜன.3 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் கொடுக்கப்படும் படிவத்தை பெற்றுக்கொண்டு பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News December 27, 2024

மன்மோகன் சிங் மறைவிற்கு மயிலாடுதுறை எம்பி இரங்கல்

image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல் நலக்குறைவால் மறைந்தார். தொடர்ந்து இரண்டு முறை நெருக்கடியான தருணங்களில் இந்தியாவை மீட்டவர் மன்மோகன் சிங் என்றும், வரலாறு உங்களை வலிமையானவராக நினைவு கூறும் எனவும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா பதிவிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!