India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு மாரத்தான் ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். செம்பனார்கோவில் காவல் நிலையம் முதல் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஏராளமான இளைஞர்கள், மாணவிகள் , பெரியவர்கள் மராத்தான் போட்டியில் பங்கேற்றனர்.
சீர்காழி மேல சாலை கிராமத்தில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்-மில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சீர்காழி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் கைரேகை ஆதாரங்களை பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி திருச்சி-தாம்பரம் ஜன்சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து 3:30 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் ரயில் இன்று முதல் 3:45 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர மாற்றத்தால் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம் ஆகிய நிறுத்தங்களிலும் நேரம் மாறுகிறது. விழுப்புரம் முதல் திருச்சி வரை நேரம் மாற்றம் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
குத்தாலம் தாலுகா, கண்டியூர் புதுத் தெருவை சேர்ந்தவர் முருகதாஸ் (23). 15 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்த இவர், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கோவிலில் வைத்து தாலி கட்டி தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதில் சிறுமி கருவுற்றார். இந்நிலையில் புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முருகதாசை கைது செய்தனர்.
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், ஆறுபாதி ஊராட்சியில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டிகள் இன்று நடைபெற்றது. இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் கொடி அசைத்து துவங்கி வைத்தனர். செம்பனார்கோயில் ஒன்றிய தலைவர் நந்தினி ஸ்ரீதர் ஒன்றிய செயலாளர் அன்பழகன் அப்துல் மாலிக் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
வைத்தீஸ்வரன் கோயில் அருகே புங்கனூர் பகுதியில் நேற்று இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இதில் காட்டுமன்னார்குடி கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த அன்புராஜ்(40) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் திருமுல்லைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்ததும் நேற்று பணி முடிந்து வீடு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2,83,357 குடும்ப அட்டைதாரர்களில் தகுதி உள்ளவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள 435 நியாய விலை கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஜனவரி 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஜனவரி 9ஆம் தேதி முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தவுடன் வழங்க துவங்கி 13ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. விடுபட்டவர்களுக்கு ஜனவரி 14ஆம் தேதி வழங்கப்படும்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி திருச்சி தாம்பரமிடையே ஜன் சதாப்தி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஜனவரி 4, 5, 10 ,11 ,12 ,13 ,17 ,18 ,19 ஆகிய நாட்களில் திருச்சியிலிருந்து காலை 5:30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை விழுப்புரம் வழியாக மதியம் 12:30 க்கு தாம்பரம் சென்றடையும். அதேபோல் தாம்பரத்திலிருந்து நண்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு இரவு 11:35 மணிக்கு திருச்சி சென்றடையும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
சீர்காழி அருகே உள்ள பூம்புகார் கடற்கரையில் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மணிகண்டன்(40) என்பவர் கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி மாயமானார். போலீசார் மற்றும் மீனவர்கள் மணிகண்டனை தேடி வந்த நிலையில் நேற்று வானகிரி மீனவ கிராமத்திற்கு தெற்கே மணிகண்டனின் உடல் கரை ஒதுங்கியது. போலீசார் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
வைத்தீஸ்வரன் கோயில், ஆச்சாள்புரம், அரசூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே திருக்கோலக்கா, கோயில்பத்து, கொள்ளிடம், முக்கூட்டு, இரணியன் நகர், விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, மாதானம், அரசாளமங்கலம், உமையாள்பதி, நல்லநாயகபுரம், வேம்படி, திருமுல்லைவாசல், காப்பியக்குடி, அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை (ஜன. 4) காலை 9 மணி முதல் 5 மணிவரை மின்தடை செய்யப்படவுள்ளது
Sorry, no posts matched your criteria.