Mayiladuthurai

News January 8, 2025

மயிலாடுதுறையில் இளைஞர் விபத்தில் பலி

image

மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடி சார்ந்த சாகித் மற்றும் ரியாம் காரைக்கால் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வந்த போது தமிழ்நாட்டு எல்லை நல்லடை சாலை வளைவில் அதிவேகமாக வந்துள்ளனர் அப்போது சறுக்கி விழுந்த போது பலத்த காயம் அடைந்த ரியாம்மை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அப்போது சிகிச்சை பலனின்றி ரியாம் உயிரிழந்தார்

News January 8, 2025

கொள்ளிடம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

image

கொள்ளிடம் அடுத்த ஆனைக்காரன் சத்திரம் காவல் சரக்கத்திற்குட்பட்ட நல்லூர் மெயின்ரோட்டில் தர்ம கோட்டம் வாய்க்கால் உள்ளது. வள்ளியம்மை நகரை சேர்ந்த சாந்தலிங்கம்(75) என்பவர் குளிப்பதற்காக வாய்க்காலில் இறங்கிய போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2025

மயிலாடுதுறை வாக்காளர் பட்டியலுக்கு பெயரை மாற்றிய எம்.பி

image

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ஆர்.சுதா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னையில் உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள தனது பெயரை மயிலாடுதுறை வாக்காளர் பட்டியலுக்கு மாற்றியுள்ளார். மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி மக்களின் வளர்ச்சிக்கு என்றென்றும் பாடுபடுவேன் என எம்.பி.சுதா கூறியுள்ளார்

News January 7, 2025

மாணவர்களின் சிலம்பாட்டத்தை பார்வையிட்ட ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜன.07) நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டுப்புறக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்.

News January 7, 2025

போதை ஒழிப்பு பேரணியை தொடங்கி வைத்த கலெக்டர்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதை ஒழிப்பு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, உதவி ஆணையர் பூர்ணிமா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கனியன் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

News January 7, 2025

மயிலாடுதுறை: ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

சட்டசபையில் ஆளுநர் ரவி சட்டசபையை புறக்கணித்ததால், இன்று (ஜன.07) திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் அறிக்கையின்படி, மயிலாடுதுறை தபால் நிலையம் அருகில் திமுக மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் அனைத்து திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

News January 7, 2025

மயிலாடுதுறை: வாகனம் ஓட்டிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

image

வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். இலகுரக வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நேற்று (ஜன.06) ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அறிவுறுத்தினார்.

News January 6, 2025

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 232 மனுக்கள்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு வேண்டுதல் உள்ளிட்ட மொத்தம் 232 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். நடவடிக்கை குறித்த விபரங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

News January 6, 2025

பெருஞ்சேரியில் 60 அடி உயர சிவலிங்கம்

image

குத்தாலம் தாலுகா, பெருஞ்சேரி கிராமத்தில் சுமார் 60 அடி உயரத்தில் லிங்க வடிவிலான சிவன் கோயில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது, இங்கு பிரதிஷ்டை செய்யவிருக்கும் லிங்கமானது 5அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன சிலை ஆகும். கோயிலுக்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் தற்போதே பக்தர்கள் இக்கோவிலுக்கு படை எடுத்த வண்ணம் உள்ளனர்.

News January 5, 2025

ஏடிஎம் உடைத்து ரூ.6.08.600 திருடப்பட்டதாக புகார்

image

சீர்காழி அருகே உள்ள மேலசாலை பகுதி இந்தியன் வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து இன்று அதிகாலை மர்ம நபர்கள் பணத்தை கொள்ளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.6.08.600 பணம் கொள்ளை போனதாக வங்கி மேலாளர் வைத்தீஸ்வரன் கோயில் காவல்துறையிடம் இன்று புகார் அளித்துள்ளார். முகமூடி அணிந்து திருடிய மூன்று மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!