India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மயிலாடுதுறை நகராட்சியுடன் இணைந்து உணவு பாதுகாப்பு பதிவு, உரிமம் முகாம் மற்றும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி முகாம் மயிலாடுதுறை அபிராமி ஹோட்டலில் இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து பதிவு மற்றும் உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளனர்
கொள்ளிடம், சந்தைபடுகை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இன்று கட்டிடத்தின் மேற்கூரை காரைகள் பெயர்ந்து விழுந்ததில் பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கொள்ளிடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சேலம் செல்லும் ரயிலானது விராக்கியம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் சேலம் செல்லாது. சேலத்தில் இருந்து மயிலாடுதுறை வரும் ரயிலானது கரூர் ரயில் நிலையத்திலிருந்து மாலை புறப்பட்டு மயிலாடுதுறைக்கு வந்தடையும். பிப்ரவரி 7,11 ,14 ,18 ஆகிய நான்கு நாட்களுக்கு மட்டும் நாமக்கல் சேலம் இடையே ரத்து செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் கோ.வி செழியனுக்கு செம்பனார்கோயில் ஒன்றிய செயலாளர் முன்னாள் முதல்வர் கலைஞர் படத்தை பரிசாக கொடுத்து வரவேற்றார். அப்போது பூம்புகார் எம்.எல்.ஏ மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் இன்று (பிப்.4) இந்து முன்னணி அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்துக்குக் காவல் துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், சீர்காழியில் இந்து முன்னணி மயிலாடுதுறை மாவட்ட தலைவர் மற்றும் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ஆகியோர் முன்னெச்சரிக்கையாக நேற்று (பிப்.03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாப்படுகை ஸ்டாலின் நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் ஜோதிபாசு(15). சிறுவன் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கொத்தனார் வேலைக்கு சென்று வந்துள்ளார். சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்த சிறுவனை பெற்றோர் வேலைக்கு போக சொல்லி வலியுறுத்தியதால் மனமுடைந்த ஜோதிபாசு நேற்று விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை உட்கோட்டம், பாலையூர் காவல் சரக பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சட்டவிரோதமாக சாராயம் கடத்தி வந்த நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளியை கைது செய்த பாலையூர் காவல் நிலைய காவலர்களை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 3 நபர்கள் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் , பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஜி.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்துள்ளார்.
சீர்காழி அருகே புதுப்பட்டினம் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நாளை (பிப்.3) மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை புதுப்பட்டினம் பள்ளிவாசல் தெருவில் உள்ள ராயல் கிளினிக்கில் நடைபெற உள்ளது. முகாமில் சர்க்கரை நோய், இருதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் அனைத்து விதமான பொது மருத்துவத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
.மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்-7ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார். இந்த முகாமில் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட 12th, டிப்ளமோ, ஐடிஐ, பி.இ பட்டதாரிகள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். கூடுதல் விலவரங்களுக்கு04364299790 என்ற எண்ணைஅணுகவும். விலவரங்களுக்கு
Sorry, no posts matched your criteria.