India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளபடி, ரயில் எண் 16847/16848 மயிலாடுதுறை – செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில், ஆலக்குடி நிலையத்தில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்படும். இந்த நிறுத்தம் சோதனை அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 முதல் 2025 ஆம் ஆண்டு மே 10 வரை அமலில் இருக்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம், ஸ்ரீ ஜெயின் பைனான்ஸ் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாமானது நாளை (பிப்.9) ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது, மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசம்.
மயிலாடுதுறை கலெக்டர் ஏ.பி.மகாபாரதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிரதம மந்திரியின் பயிா்காப்பீட்டுத் திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. எதிா்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை தவிா்த்திட விவசாயிகள் அனைவரும் பயிா்க்காப்பீடு செய்து பயன் அடைய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9790004303 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் இந்த சம்பவம் ஆனது தொடர்கதையாகி வருவதால் அதனை கண்டிக்கும் வகையில் மத்திய அரசின் கவனத்திற்கு தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை அதனை கண்டுகொள்ளாத மத்திய பாஜக அரசை கண்டித்தும் மீனவர்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கோரி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் இதில் மயிலாடுதுறை எம்.பி. வழக்கறிஞர் சுதா உள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் உறுதிமொழி வாசிக்க பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தஞ்சையை சேர்ந்த அறிவழகன், மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலை முடித்து வீட்டிற்கு செல்ல மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்த அவர், பக்கத்து நடைமேடைக்கு செல்ல சரக்கு ரயிலின் அடியில் புகுந்த சென்றுள்ளார். அப்போது ரயில் புறப்படவே அவரது இரு கால்களும் துண்டாக்கின. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறையில் ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை இணைந்து நடத்தும் ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கான கபாடி போட்டியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
குத்தாலம் தோப்புத் தெருவை சோ்ந்தவா் தினேஷ். ஜேசிபி ஓட்டுநரான இவரை, கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஏற்பட்ட தகராறு ஒன்றில் அதே பகுதியை சோ்ந்த சரவணன் (27), ஆபேல் (25), ஜெயவீரன் (25) ஆகிய மூவர் மதுபோதையில் கத்தியால் குத்தியுள்ளனர். இது தொடர்பான வழக்கில் தினேஷை கத்தியால் குத்திய மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.1000 அபராதம் விதித்து, மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். ரிப்போர்ட்டராக பதிவு செய்ய <
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் எனவும் இதில் பங்கேற்று பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.