India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அஞ்சாறுவார்த்தலை பகுதியில் இன்று எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஏ பி மகாபாரதி உத்தரவின் பேரில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகன சோதனை இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்திரசேகரன் தலைமையில் மயிலாடுதுறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளிட்டோர் வாகன சோதனை செய்தனர்.
மயிலாடுதுறையில் கடந்த 9 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த நிலையில் மயிலாடுதுறை பொதுமக்கள் இனி சிறுத்தை குறித்து அச்சப்பட வேண்டாம் என மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் ஊராட்சியில் வனத்துறை அதிகாரிகள் நேற்று சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில தினங்களாக மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதி ஆரோக்கியநாதபுரம், குத்தாலம், காஞ்சிவாய், பேராவூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக என கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் ஊராட்சியில் வனத்துறை அதிகாரிகள் நேற்று சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில தினங்களாக மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதி ஆரோக்கியநாதபுரம், குத்தாலம், காஞ்சிவாய், பேராவூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக என கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூடுதல் பாதுகாப்பு பணிக்காக ஒடிசா மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மத்திய பாதுகாப்பு படையினரில் சிலர் சீர்காழி அடுத்த புத்தூர் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று எஸ்பி மீனா அவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு குறைகள் ஏதேனும் உள்ளதா என்பதை கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் ரமலான் பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நேற்று நடைபெற்றன. இதில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சீர்காழி பகுதிக்குட்பட்ட 6 பள்ளி வாசல்களிலும், திருவெண்காட்டில் 2, புதுப்பட்டினத்தில் 3, ஆனைக்காரன் சத்திரத்தில் 7, வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் 2 என மொத்தம் 20 பள்ளிவாசல்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சீர்காழி நகர ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய நல்லிணக்க மையம் சார்பில் ரமலான் பண்டிகையின் முக்கிய நிகழ்வான கூட்டு ஃபித்ரா எனும் ஏழை மக்களுக்கு நோன்பு பெருநாள் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நகர செயலாளர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை எளிய 75 குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருள்கள் காய்கறி உள்ளிட்ட உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமை ஆதினத்திற்கு சொந்தமான வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத கார்த்திகை ஒட்டி இன்று செல்வ முத்துக்குமார சுவாமிக்கு 21 வகை நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விசேஷ அலங்காரத்தில் சண்முகார்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறையில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்தப் பள்ளிவாசலில் இன்று உலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஊராட்சி மன்ற தலைவர் அர்சிதா பானு சாதிக் கைகுலுக்கி ஆரத்தழுவி அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சீர்காழி அடுத்த கொள்ளிடம் சோதனைச்சாவடியில் தேர்தலை முன்னிட்டு இரவும் பகலுமாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் தணிக்கைக்கு உட்படுத்துகின்றனர். இந்நிலையில் நேற்று முதல் கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படையினருடன் சோதனை சாவடியில் மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.