India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்காக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் பாதுகாப்பு அம்சங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி அருகே செம்பனார்கோவிலில் நகை மற்றும் பணத்துடன் இருந்த பர்ஸை செந்தில்குமார் என்பவர் தவறவிட்டார். அதனை கண்டெடுத்த ராதாகிருஷ்ணன் என்பவர் முகவரியை பார்த்து தொடர்பு கொண்டு உரியவரிடம் பர்சை ஒப்படைத்தார். தொடர்ந்து ராதாகிருஷ்ணனின் செயலை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இன்று பாராட்டினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் அமலுக்கு வந்த நாளிலிருந்து இதுவரை 102 மதுவிலக்கு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 103 நபர்களை கைது செய்யப்பட்டும், 3,663 லிட்டர் பாண்டி சாராயம், 91 லிட்டர் அயல் மாநில மதுபானங்கள், 40 லிட்டர் தமிழ்நாடு மதுபானங்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதன் மொத்த மதிப்பு ரூ.2,34,552/- என மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் பாபு போட்டியிடுகிறார். இதனிடையே அதிமுக தலைமை கழகம் சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கழக அமைப்பு செயலாளர்கள் ஆசைமணி, காந்தி மாவட்ட செயலாளர்கள் பவுன்ராஜ், பாரதிமோகன் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி விவாதம் நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொள்ளிடம் சோதனை சாவடியில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் செல்வராஜ் தலைமையில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீர்காழி சேந்தங்குடி பகுதியை சேர்ந்த கனிவண்ணன் என்பவர் தனது காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவனிடம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான புகார்களை 1800 425 8970 , 04364 -211722 என்ற எண்ணிலும், திருவிடைமருதுார் தொகுதிக்கு 0435-240187, கும்பகோணம் தொகுதிக்கு 0435-2430101 , பாபநாசம் 0437-4222456 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தேர்தல் அலுவலர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இதுவரை 3704 சுவர் விளம்பரங்களும், 6864 சுவரொட்டிகளும், 1174 பதாகைகளும், 751 இதர விளம்பரங்களும் அகற்றப்பட்டு, 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக அஜித்குமார் என்கின்ற இளைஞரை 7 பேர் கொண்ட குழுவினர் கொலை செய்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு இடர்பாடுகள் ஏற்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், பட்டமங்களம் ஆகிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனரா என ஆட்சியர் மகாபாரதி இன்று ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக ம.க .ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.