India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே வழுவூர் மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வழுவூர் வி ஜி கே மணி இல்லத்தில் நேற்று மாவீரன் வன்னியர் சங்க கலை இலக்கிய அணி மாவட்ட நிர்வாகி கடலி கார்த்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வழுவூர் வி ஜி கே மணி கலந்து கொண்டு நிர்வாகிக்கு சால்வை அணிவித்து கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக 30 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே பிரதான கட்சிகளின் வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் – சுதா , அதிமுக – பாபு , பாமக – ம.க. ஸ்டாலின் , நாம் தமிழர் கட்சி காளியம்மாள் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம. க. ஸ்டாலின் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் சீர்காழி பாமக நகர தலைவர் கார்த்தி, முன்னாள் நகர தலைவர் குமார் உள்ளிட்ட சீர்காழி பாமக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளில் எளிதாக வாக்களிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி தலைமையில் முன்னேற்பாடு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது வருவாய் கோட்டாட்சியர் யுரேகா , அர்ச்சனா உட்பட பலர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் களைகட்ட தொடங்கிய நிலையில் தற்போது அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் பாபு மாவட்டத்தின் சமனிலை பகுதியான கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். முன்னதாக கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் வழிபட்டு அப்பகுதியில் உள்ள மீனவர்களிடம் வாக்கு சேகரித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 405 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.மற்றொரு பக்கம் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.மயிலாடுதுறை தொகுதிக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து சுதா ராமகிருஷ்ணன் கலெக்டர் அலுவலகத்தில் இன்று(மார்ச்.27) வேட்புமனு தாக்கல் செய்தார்.
மயிலாடுதுறை மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும் பொருட்கள் மற்றும் ரொக்கத்தொகைகள் கைப்பற்றப்படுகிறது.இது தொடர்பாக மேல்முறையீடு ஏதேனும் இருப்பின் ஆட்சியர் அலுவலக தரைத்தளம் அறை எண் 45 மேல்முறையீடு குழுவினரிடம் மாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் தெரிவிக்கலாம் என தேர்தல் அலுவலர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலுக்காக பாதுகாப்பு பணி மற்றும் தொடர் வாகன சோதனைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா காவல் நிலையம் , கட்டுப்பாட்டு அறை , வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(மாரச் 27) காலை 10 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, ராம்நாடு, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.நேற்று மாலை சீர்காழி கடைவீதி கொள்ளிடம் முக்கூட்டு பழையபேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடை கடையாக ஏறி இறங்கி வியாபாரிகள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் ஆகியோரிடம் இரட்டை இலை அறையில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினார். அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Sorry, no posts matched your criteria.