Mayiladuthurai

News April 2, 2024

மயிலாடுதுறை:பாதிக்கப்பட்ட நபருக்கு நிவாரண நிதி வழங்கல்

image

சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கில் பாதிக்கப்பட்ட கரிகாலன் என்பவருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் ரூ. 50,000 நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிதி உதவியினை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா இன்று பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

News April 1, 2024

காங்கிரஸ் வேட்பாளருக்கு சிறப்பு வரவேற்பு

image

சீர்காழி அடுத்த கொண்டல் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா இன்று பொதுமக்களிடையே கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக அவருக்கு திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன் தலைமையில் திமுகவினர் ஆள் உயர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன், எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 1, 2024

சீர்காழி பகுதியில் பணம் பறிமுதல்

image

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீர்காழி அடுத்த காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த மாமல்லன் என்பவர் அனுமதியின்றி எடுத்து வந்த ரூ. 65 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News April 1, 2024

தரங்கம்பாடி அருகே அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூதனூரில் உள்ள அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் இல்லத்தில், தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அதிமுக சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

News April 1, 2024

மயிலாடுதுறை:முதலமைச்சரை விமர்சித்த எதிர்கட்சி தலைவர்

image

மயிலாடுதுறையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரச்சார உரையாற்றினார். அப்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டம் நாங்கள் அமைத்து தந்தோம் எனவும் , ஆனால் நாங்கள் பெற்றெடுத்த பிள்ளைக்கு மு.க.ஸ்டாலின் பெயர் வைத்துள்ளார் என்றும் விமர்சித்தார்‌.

News March 31, 2024

மயிலாடுதுறையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

image

மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தொடர்ந்து திமுக பொதுக்குழு உறுப்பினர் அர்ஷத் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News March 31, 2024

மயிலாடுதுறையில் 31 லட்சம் வரை பணம் பறிமுதல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக எடுத்துச்செல்லப்பட்ட ரூ.31 லட்சத்து 74 ஆயிரத்து 145 இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மகாபாரதி இன்று(மார்ச்.31) தெரிவித்துள்ளார். மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

News March 31, 2024

திருச்சபையில் அமைச்சர், எம்எல்ஏக்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

image

சீர்காழியில் திருச்சபை மற்றும் வழிபாட்டு தலங்களிலிருந்து வழிபாட்டை நிறைவு செய்து வந்த பொதுமக்களிடம் அமைச்சர் மெய்ய நாதன், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார். திமுக நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதா அறிமுகம் செய்து வைத்து வாக்குகள் சேகரித்தனர்

News March 31, 2024

இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் எவ்வித பதற்றமும் இல்லாமல் முறையாக தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஆட்சியர் கூறியுள்ளார்.

News March 31, 2024

மயிலாடுதுறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பான விவரங்களை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வாக்காளர் தொடர்பு மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவையான விபரங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!