India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட சித்தர்காடு பகுதியில் உள்ள பனந்தோப்பு தெரு, பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாபெரும் தூய்மை பணி இன்று நடைபெற்றது. தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர் மா.ரஜினி அறிவுறுத்தலில் நடைபெற்ற தூய்மை பணியில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு சாலையோரம் மண்டிக்கிடந்த புதர்களை அகற்றி குப்பைகளை சுத்தம் செய்தனர்.
மயிலாடுதுறையில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் 13 வகையான ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் தகவல் சீட்டு வழிகாட்டுதலுக்கு மட்டுமே பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி லயன்ஸ் சங்கம் சார்பில் நகரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு நேற்று விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட கல்லூரி மாணவி ஒருவருக்கு சிகிச்சைக்காக ரூ.11000 நிதி உதவி வழங்கினர். லயன்ஸ் சங்கத் தலைவர் சந்துரு தலைமையில் செயலாளர் சரவணகுமார், பொருளாளர் ஆரிப் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் மாணவிக்கு நிதி உதவி அளித்தனர்.
மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் பாராளுமன்ற தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் நுண் பார்வையாளர்கள் ஈடுபட உள்ளனர். இதனிடையே தேர்தல் ஆணையத்தின் இணையதள மென்பொருள் செயலி வழியாக சட்டமன்ற தொகுதி வாரியாக முதல்கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் முறை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் பார்வையாளர் கன்ஹீராஜ் ஹச் பகத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் நேற்று சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வனத்துறையினர் சிறுத்தை தொடர்பாக தகவல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் , தகவல்களை மயிலாடுதுறை மற்றும் அரியலூர் வனத்துறையினர் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க இரு அணியினரும் தயார் நிலையில் உள்ளதாக நாகை வன உயிரின காப்பாளர் இன்று கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அஞ்சாறுவார்த்தலை பகுதியில் இன்று எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஏ பி மகாபாரதி உத்தரவின் பேரில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகன சோதனை இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்திரசேகரன் தலைமையில் மயிலாடுதுறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளிட்டோர் வாகன சோதனை செய்தனர்.
மயிலாடுதுறையில் கடந்த 9 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த நிலையில் மயிலாடுதுறை பொதுமக்கள் இனி சிறுத்தை குறித்து அச்சப்பட வேண்டாம் என மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் ஊராட்சியில் வனத்துறை அதிகாரிகள் நேற்று சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில தினங்களாக மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதி ஆரோக்கியநாதபுரம், குத்தாலம், காஞ்சிவாய், பேராவூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக என கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் ஊராட்சியில் வனத்துறை அதிகாரிகள் நேற்று சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில தினங்களாக மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதி ஆரோக்கியநாதபுரம், குத்தாலம், காஞ்சிவாய், பேராவூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக என கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.