India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றுகின்ற பிற மாவட்டங்களை சேர்ந்த அரசு அலுவலர்கள் தபால் வாக்கு அளிக்க ஏதுவாக படிவம் 12 பிற மாவட்டங்களுக்கு 1437 வாக்காளர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்டது. இதில் 1290 தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் மீதமுள்ள வாக்குகள் விரைந்து பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காவலர்கள் பலர் பங்கேற்றனர். மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிகளை பார்வையிட காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறையில் எதிர்வரும் நாட்களில் கோடை வெயில் முன்பு இருந்ததை விட அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார். மேலும் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும் எனவும் ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடியில் பணியாற்ற உள்ள தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி தலைமையில், தேர்தல் பார்வையாளர் கன்ஹீராஜ் ஹச் பகதே முன்னிலையில் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பாண்டூர் ஊராட்சி குளத்தூர் கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ பாண்டவர்கள் சமேத ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் இதனை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மகாபாரத கதை பாடப்பட உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா வரும் 22 ஆம் தேதி நடைபெற்ற உள்ளது
மயிலாடுதுறையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி நேற்று சிறப்புரையாற்றினார். அப்போது இந்தியா கூட்டணியின் நோக்கம் நல்லாட்சியை தருவது என்றும் , பிரதமர் மோடி சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பதில்லை என விமர்சித்தார். மேலும் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்பவர்களின் , உலக மகா ஊழலாக தேர்தல் பத்திர முறைகேடு அமைந்திருக்கிறது என தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் ஊராட்சி பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் சுதாவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இரவிலும் நேற்று வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர பிரச்சாரம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளும், முந்தைய நாளும் அரசியல் கட்சிகளோ , வேட்பாளர்களோ அல்லது தனியார் அமைப்புகளோ மற்றும் தனி நபரோ அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும். மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி இன்று அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று சிறப்புரையாற்றினார். அப்போது ஜெயலலிதா மறைவுக்குப்பின் இபிஎஸ், ஒபிஎஸ் ஆகியோர் மோடிக்கு காவடித்தூக்கி 4 ஆண்டுகள் ஆட்சியை தக்கவைத்தனர். தற்போது டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர். அதிமுக தொண்டர்களை பழனிசாமி ஏமாற்றி வருகிறார். வலுவான கூட்டணியை அமைக்கக் கூட அதிமுகவால் முடியவில்லை என விமர்சித்தார்.
மயிலாடுதுறையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சிறப்புரையாற்றினார். அப்போது எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தயவுசெய்து மோடிக்கு வாக்களிக்காதீர்கள் என தெரிவித்தார். மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறது பாஜக அரசு. ஒரே தேர்தல் நடத்தினால் நாட்டில் வறுமை ஒழிந்துவிடுமா எனவும், ஒரே நாடு என்றால் தண்ணீர் ஏன் நம் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
Sorry, no posts matched your criteria.