India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் பகுதியில் உள்ள ஏவிசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான மகாபாரதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் ஒன்றிணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று தணிக்கை செய்தனர்.
மயிலாடுதுறை நகரத்தில் பட்டமங்கல தெருவையும் , பெரிய கடை வீதியையும் இணைக்கும் இடத்தில் குழாய் பதிப்பதற்காக சாலையின் குறுக்கே வெட்டப்பட்ட பள்ளத்தை முறையாக மூடி சாலையை சமன்படுத்தாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இச்சாலையை கடக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நிலைத்தடுமாறி கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சரிசெய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டில் பனந்தோப்பு தெரு , இந்திரா நகர் , முருகன் நகர் மற்றும் செல்வவிநாயகர் நகர் ஆகிய பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படும் சிசிடிவி கேமரா இன்று பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர் மா. ரஜினி தனது சொந்த செலவில் சிசிடிவி அமைத்துக் கொடுத்தது பலதரப்பு மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
சீர்காழி அருகே தாண்டவன்குளம் கன்னியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.நேற்றிரவு வான வேடிக்கை நடைபெற்றது. அப்போது வெடி விபத்து ஏற்பட்டு பக்தர்கள் கூட்டத்தில் வெடித்து சிதறியது. இதில் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சீர்காழி அருகே கூப்பிடுவான் உப்பனாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் முதலை நடமாடுவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனால் அச்சமடைந்த உள்ளூர்வாசிகள் முதலை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் வனத்துறை அலுவலர்கள்,முதலை நடமாட்டம் இருப்பதாகவும், இதனால் ஆற்றின் உட்பகுதியில் பொதுமக்கள் இறங்கவோ மற்றும் கரைப்பகுதியில் நடக்கவோ கூடாது எனவும் இன்று எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதுகாப்பு அறைகளுக்கு போடப்பட்டுள்ள மூன்றடுக்கு பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அங்கு பணியில் இருக்கும் துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் காவலர்களை மாவட்ட எஸ்பி மீனா இன்று நேரில் சந்தித்து தணிக்கை மேற்கொண்டார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏ.வி.சி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்கு பாதுகாப்பு அறைகளின் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மகாபாரதி இன்று ஆய்வு செய்தார். அப்போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட சித்தர்காடு அருகே சந்தைப்பேட்டை தெரு மற்றும் பாரதி நகர் இணைப்பு ஆகிய பகுதிகளில் சிறப்பு தூய்மை பணியானது மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து துப்புரவு பணியாளர்களைக் கொண்டு சாலையோரம் மண்டி கிடந்த புதர்கள் மற்றும் குப்பைகள் அனைத்தும் அப்பகுதிகளில் இருந்து இன்று அகற்றப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் பதிவான ஓட்டு சதவீதம் என்பது 3வது முறையாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.71 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, மயிலாடுதுறையில் 70.09 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீர்காழியில் உள்ள ஜாமிஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ஈகை திருநாளை முன்னிட்டு சீர்காழி அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் தேவைக்காக ரத்த தான முகாம் நாளை(ஏப்.21) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. காலை 9: 00 மணி முதல் 12: 30 மணி வரை நடைபெற உள்ள ரத்ததான முகாமில் ஆர்வமுள்ள பொதுமக்கள் முன்பதிவு செய்து பங்கேற்று ரத்த தானம் வழங்கலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.