Mayiladuthurai

News April 26, 2024

திருக்கடையூர் சாய்பாபா கோவிலில் பக்தர்கள் தரிசனம்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவிலில் நேற்று வியாழக்கிழமை ஒட்டி சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

News April 25, 2024

மயிலாடுதுறையில் கொலை குற்றவாளி கைது 

image

மயிலாடுதுறையில் மனைவியை பிரிந்து வாழும் சபரிநாதன் என்பவர் அருகே வசிக்கும் பிரேமா என்பவரிடம் பேசி வந்துள்ளார். இதனிடையே மது போதையில் பிரேமாவிடம் சபரிநாதன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பிரேமாவின் மகன் நடராஜன் கத்தியால் குத்தி சபரிநாதனை கொலை செய்துள்ளார். இதனிடையே குற்றவாளி நடராஜனை மயிலாடுதுறை போலீசார் இன்று கைது செய்தனர்.

News April 25, 2024

கொள்ளிடத்தில் அதிமுக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி

image

சீர்காழி அடுத்த கொள்ளிடம் கடை வீதியில் அதிமுக சார்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பங்கேற்று நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் இளநீர் தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார். ஒன்றிய செயலாளர் நற்குணன் மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம் பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

News April 25, 2024

மயிலாடுதுறையின் சிறப்பான கேது ஸ்தலம்

image

மயிலாடுதுறை, கீழ்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ளது நாகநாதர் கோவில். தமிழகத்தில் உள்ள நவகிரக கோவில்களில் கேதுவிற்கான ஸ்தலம் இதுவே. மூலவராக நாகநாதரிற்கு இடப்புறத்தில் கேது சன்னதி உள்ளது. இக்கோவிலில் வானவியல் சாஸ்திரத்தின் படி, கேது தோசம், நாக தோசம் உள்ளோர் இங்கு வழிபட்டு தோச நிவர்த்தி செய்வதாக நம்பப்படுகிறது.

News April 25, 2024

மயிலாடுதுறை:பள்ளியில் விழிப்புணர்வு குறும்படங்கள்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அருகே மேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று பள்ளியில் பெண்ணே விழித்துக் கொள் விழிப்புணர்வு குறும்படங்கள் மாணவ மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது மாணவ மாணவிகள் தங்களது சந்தேகங்களை காவல்துறையினரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

News April 25, 2024

எஸ்பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

வைத்தீஸ்வரன் கோவிலில் நேற்று நகரத்தார் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில் எஸ்பி மீனா மேற்பார்வையில் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். டிஎஸ்பி லாமேக் 3 ஆய்வாளர்கள் 3 உதவி ஆய்வாளர்கள் 10 காவல் ஆளினர்கள் 15 சிறப்பு காவல் படை காவலர்கள் 61 ஊர்க்காவல் படை காவலர்கள் பொது மக்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.

News April 25, 2024

சீர்காழி:மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

கொள்ளிடம் அருகே அரசு செந்தமிழ் உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலநீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓவிய போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.

News April 24, 2024

மயிலாடுதுறை அருகே பட்டமளிப்பு விழா

image

மயிலாடுதுறை அருகே நீடூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி தனியார் திருமண மஹாலில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக பலர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பரிசுகள் கொடுக்கப்பட்டு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

News April 24, 2024

மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

image

மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் “பெண்ணே விழித்துக் கொள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு குறும்படம் இன்று திரையிடப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு குறும்படங்களை பார்வையிட்டு தங்களது சந்தேகங்களை காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர். அதனை தொடர்ந்து காவல்துறை சார்பில் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.

News April 24, 2024

மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு புதிய வரவு

image

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே மயிலாடுதுறை பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நடைமேடையில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் அமைப்பதற்கான பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!