Mayiladuthurai

News March 19, 2024

மயிலாடுதுறையில் பைக் திருடிய இருவர் கைது

image

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி பகுதியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தொடர்ந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த ஆதிகேசவன் மற்றும் கவியரசன் ஆகிய இருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

News March 19, 2024

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தகவல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள 186 துப்பாக்கி உரிமை தாரர்களில் தற்போது 148 உரிமைதாரர்கள் காவல் நிலையத்தில் துப்பாக்கியை ஒப்படைத்துள்ளனர். மேலும் மீதமுள்ள 38 துப்பாக்கி உரிமைதாரர்கள் வங்கி மற்றும் இதர பாதுகாவலர் பணியில் உள்ளதால் அவர்களிடமிருந்து சான்று பெறப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று(மார்ச்.19) தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2024

மயிலாடுதுறையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

image

மயிலாடுதுறை நகராட்சி குடிநீர் திட்டத்தின் கீழ் முடிகண்டநல்லூர் பகுதியில் உள்ள கொள்ளிடம் தலைமை குடிநீர் ஏற்று நிலையத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே குடிநீர் பிரதான குழாய்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மார் 21 மற்றும் மார்ச்.22 ஆகிய இரண்டு தினங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மயிலாடுதுறை நகராட்சி சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2024

சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் படுகாயம்

image

சீர்காழி ரயில் நிலையத்தில் இன்று காலை திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற செந்தூர் விரைவு ரயில் நின்று கிளம்பியது. அப்போது அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் நின்று புறப்பட்ட சில நிமிடங்களில் ரயிலின் பக்கவாட்டில் விழுந்து அடிபட்டு தலையில் படுகாயமடைந்தார். ரயில்வே போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 19, 2024

மயிலாடுதுறையில் பாமக போட்டி

image

பாமக நிறுவனர் ராமதாஸ்,தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்,10 தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் பாமக போட்டியிடுகிறது.மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் பாமக சார்பில் ம.க. ஸ்டாலின் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

News March 19, 2024

மயிலாடுதுறையில் பாமக போட்டி

image

பாமக நிறுவனர் ராமதாஸ்,தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்,10 தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் பாமக போட்டியிடுகிறது.மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் பாமக சார்பில் ம.க. ஸ்டாலின் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

News March 19, 2024

மயிலாடுதுறை அருகே அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்

image

தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் கஞ்சா நகரம் பகுதியில் நேற்று இரவு அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டி அதிமுக சார்பில் பொதுமக்களை நேரில் சந்தித்து அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

News March 18, 2024

மயிலாடுதுறை தேர்தல் அலுவலர் அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக வாக்குப்பதிவு அலுவலர்களாக 5000 ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த 60 அலுவலர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.மேலும் 85 மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News March 18, 2024

மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் போட்டி

image

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் திமுக சார்பில் ராமலிங்கம் வெற்றி பெற்றார்.

News March 17, 2024

மயிலாடுதுறை புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அல்லது அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக எந்நேரமும் 1800-425-8970 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!