India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மதுபோதையில் கடைகள், தெருவிளக்குகளை சேதப்படுத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். நிம்மேலி கிராமத்தில் இரவு நேரங்களில் கடைகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் சேதப்படுத்தி வந்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் குற்றசம்பவங்களில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்தனர்.
போக்ஸ் ஐயர் என்ற பாதிரியார் ஆற்றில் மாங்கொட்டை ஒன்று மிதந்து வருவதை பார்த்து அதை நட்டு வைத்துள்ளார். பின்னர் அது மரமாகி காய்கள் வைக்கத் துவங்கியது. அதுதான் இன்று பாதிரி மாம்பழம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாம்பழம் வெளியில் பச்சை நிறத்திலும், உள்ளே சிவப்பு நிறத்திலும் இருக்கும் என்றும், இது மயிலாடுதுறை பரிசுத்த இம்மானுவேல் ஆலயத்தில் நடப்பட்டதால் பாதிரி மாம்பழத்தின் பிறப்பிடம் என்று கூறுகிறார்கள்.
மயிலாடுதுறையில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்க, தேசிய மருத்துவ ஆணையத்திடம் இந்த ஆண்டுக்குள் விண்ணப்பிக்க இருப்பதால், 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி வழங்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு அரசின் மருத்துவ கல்வி இயக்ககம் வலியுறுத்தி உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்த பிறகு, புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து முன்னோடி விவசாயிகள் பங்கேற்று வேளாண்மை, நீர்பாசனம், கால்நடை, மின்சாரம், தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுத்துறையில் இருந்து திருச்சி வரை திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து தினங்கள் மட்டும் இயங்கி வந்த விரைவு ரயில் இன்று முதல் வாரத்தின் அனைத்து தினங்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஜூலை 26 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ள நிலையில், விவசாயிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று(ஜூலை 18) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யவும், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் க்ண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நாம் மக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் ஷங்கமித்திரன் உட்பட பல்வேறு அமைப்பு வழக்கறிஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மல்லியம் கிராம நிர்வாக அலுவலகத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிராம நிர்வாக அலுவலரிடம் தரவுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கீதா, மயிலாடுதுறை தாசில்தார் விஜயராணி உள்ளிட்டோர் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆணை மேலகரம் ஊராட்சியில் இன்று 2 விவசாயிகளுக்கு தலா 9 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள டிராக்டரை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி மகாபாரதி இன்று வழங்கினார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.