Mayiladuthurai

News July 31, 2024

வெள்ள முன்னெச்சரிக்கை தொடர்பான கூட்டம் 

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டதையொட்டி கொள்ளிடம் ஆற்று கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முன்னேற்பாடு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்பி மீனா உட்பட பலர் பங்கேற்றனர்.

News July 31, 2024

நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அட்டை 

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூதனூரில் உள்ள அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் இல்லத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட அதிமுக ஒன்றிய,நகர, பேரூர் கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கலந்துகொண்டு அடையாள அட்டையை வழங்கினார்.

News July 31, 2024

மயிலாடுதுறையில் இரவு 7 மணி வரை மழை

image

தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் எனத் தெரிவ்க்கப்பட்டுள்ளது.

News July 31, 2024

தருமை ஆதினம் அடி பிரதட்சணம் செய்து வழிபாடு

image

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் செவ்வாய் பரிகார ஸ்தலமான ஸ்ரீ தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமானுக்கு ஆடிக்கிருத்திகை சிறப்பு அபிஷேகம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயிலில் அடிபிரதட்சணம் செய்து வழிபாடு மேற்கொண்டார்.

News July 30, 2024

அதிமுகவில் இருந்து மயிலாடுதுறை நிர்வாகி அதிரடி நீக்கம்

image

மயிலாடுதுறை மாவத்தில், வடக்கு ஒன்றியக் கழக மாவட்ட பிரதிநிதி வி.லெட்சுமணனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

News July 30, 2024

மயிலாடுதுறையில் அறிவிப்பை ஒத்திவைத்த ரயில்வே நிர்வாகம்

image

மயிலாடுதுறையில் இருந்து காலை 8.05 மணிக்கு தினசரி திருச்சி செல்லக்கூடிய ரயில் இன்று முதல் மெமு ரயிலாக இயங்கும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது . இதனிடையே வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை இந்த அறிவிப்பு ஒத்திவைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 30, 2024

ஆகஸ்டில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருகின்ற ஆகஸ்ட் 28-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், தங்களது குறை தொடர்பான மனுக்களை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , மன்னம்பந்தல் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

மயிலாடுதுறையில் திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் 2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான திறனாய்வு தேர்வு அரசு நகராட்சி பள்ளிகளில் நடைபெறவுள்ளது. 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று இத்தேர்வு நடைபெறவுள்ளது. காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், பிற்பகல் 02.00 மணி முதல் 04.00 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டத்தின் கீழ், உணவுப்பொருட்கள் பதப்படுத்தும் தொழில் தொடங்கவும், குறுந்தொழில் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தலுக்காகவும் கடனுதவி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

விவசாயிகளுடன் கருத்து கேட்பு கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை, நீர்நிலைகள் மற்றும் குளங்களில் நிரப்புவதற்கும், குறுவை சாகுபடிக்கு பயன்படுத்துவது குறித்தும் விவசாயிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!